January 23, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி முகாம் ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார் 

தென்காசி மாவட்டம், ஆய்க்குடியில் உள்ள அமர் சேவா சங்க வளாகத்தில் இன்று (24.05.2021) 18 முதல் 44 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளிக்கு (முன்னுரிமை அடிப்படையில்) கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப. அவர்கள் துவக்கி வைத்து தெரிவிக்கையில்.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க 18 வயது முதல் 44 வயது வரை உள்ள பொதுமக்களுக்கு (முன்னுரிமை அடிப்படையில்) தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தென்காசி மாவட்டத்தில் துவங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று ஆய்க்குடி அமர் சேவா சேவை சங்க வளாகத்தில் இன்று தடுப்பூசி போடும் பணி ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெறுகிறது. இந்த தடுப்பூசி முகாமில்; 36 மாற்றுத்திறனாளிகளுக்கும், 122 பொதுமக்களுக்கும் முதல் கட்ட தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், தன்னார்வ அமைப்பினர்கள் 18 வயது முதல் 44 வயது உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்துவதற்கு வழிவகை செய்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
இத்தடுப்பூசி முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் தமிழ்ச்செல்வி, சுகாதார ஆய்வாளர் மாரியப்பன், அமர்சேவா சங்கத்தினர்கள், உறுப்பினர்கள், மகாலெட்சுமி மருத்துவமனை முருகையா, செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!
Open chat