December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

Shantini Theva New Stills

அதிமுக முன்னாள் அமைச்சரால் கருவுற்றேன்- நாடோடிகள் பட நடிகை பரபரப்பு புகார்!

சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான நாடோடிகள் படத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. நட்பிற்கு இலக்கணமாக வந்த படங்களின் பட்டியலில் நாடோடிகள் படத்துக்கும் தனி இடம் உண்டு. அது வெறும் நட்பை பற்றி மட்டும் பேசாமல் நண்பர்களால் நடத்தி வைக்கப்படும் காதல் திருமணங்கள் சில வேளைகளில் எந்த நிலைக்கு செல்கிறது என்பதையும் எடுத்துரைக்கும் படமாக வெளிவந்தது.

இந்த படத்தில் வரும் சரவணன் மற்றும் பிரபா என்ற காதல் ஜோடியை நிச்சயம் யாரும் மறந்து இருக்க வாய்ப்பே கிடையாது. இந்த காதல் ஜோடியில் பிரபா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகையின் பெயர் சாந்தினி தேவி. அந்த படத்திற்கு பிறகு சில படங்களில் நடித்தாலும் அவரால் திரையுலகில் தாக்குபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் நடிகை சாந்தினி தேவா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் என்னை திருமணம் செய்வதாக கூறி ஒரே வீட்டில் 5 ஆண்டுகளாக வசித்து வந்தோம். என்னை கர்ப்பமாக்கி கருகலைப்பு செய்ய வைத்தார். ஆனால் தற்போது என்னை திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றுவதோடு அடித்து துண்புறுத்தி என்னுடைய அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும் மிரட்டுகிறார். மேலும் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இருவரும் சேர்ந்து இருந்த புகைப்படங்கள் மற்றும் மிரட்டல் விடுத்த குறுஞ்செய்தி உள்ளிட்டவற்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

ஜெயலலிதா ஆட்சியில் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் ராமநாதபுரத்தை சேர்ந்தவர். எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் அவருக்கு பிரச்சனை ஏற்படவே அமைச்சர் பதவி பறிபோனது. அதன் பிறகு அவரை அரசியலில் ஓரங்கட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://bit.ly/3uw2E2T

======================

error: Content is protected !!
Open chat