December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

மக்களுக்கு உதவும் உண்மையான ஹீரோவை கவுரவித்த விமான நிறுவனம்!

கொரோனா காலத்தில் மக்களுக்கு அதிக உதவி புரிந்து வருபவர் வில்லன் நடிகர் சோனுசூட்.

நடிகர் சோனுசூட் கடந்த ஆண்டு கொரோனா ஊடரடங்கின் போது வெளி மாநிலங்களில் சிக்கித் தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் பலரையும் சொந்த ஊருக்கு செல்ல உதவி புரிந்தார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் தங்கள் குறைகளை பதிவிடுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை உடனுக்குடன் செய்து வருகிறார்.

குறிப்பாக அண்மையில் கொரோனாவால் மிக தீவிரமாக பாதிக்கப்பட்டு இருந்த நாக்பூரை சேர்ந்த 25 வயது பெண் ஒருவர், மருத்துவமனையில் படுக்கை வசதி மற்றும் வெண்டிலேட்டர் கிடைக்காமல் தவித்து வந்தார். இது குறித்த தகவலை அறிந்ததும் நடிகர் சோனுசூட் அந்த பெண்ணை நாக்பூரில் இருந்து ஐதாராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு விமான ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்ல உதவி செய்தார்.

இதுபோன்ற பல உதவிகளை செய்துவரும் உண்மையான ஹீரோவான சோனுசூட்டை கவுரவிக்கும் வகையில் ஸ்பைஸ் ஜெட் வியான நிறுவனம் தனது விமானத்தில் சோனுசூட்டின் உருவத்தை வரைந்துள்ளது.

https://bit.ly/3fS5hqn

====================

error: Content is protected !!
Open chat