December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

மீனவ குடும்பங்களுக்கு உதவும் நடிகை தர்ஷா குப்தா!

மாடலிங் துறையில் இருந்து சின்னத்திரைக்கு வந்தவர் நடிகை தர்ஷா குப்தா. பல சேனல்களின் தொடர்களில் நடித்து வந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி 2’ நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமானர். தற்போது ருத்ரதாண்டவம் என்ற படத்திலும் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

எப்போதும் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் இவர் தற்போது சமூக சேவையிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் உணவு இன்றி வாடும் ஏழை மக்களுக்கு உணவு வழங்கி வருகிறார் தர்ஷா.

சில தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து ஒவ்வொரு பகுதியிலும் இதுபோன்ற உதவிகளை செய்து வருகிறார்.

ராயபுரத்தில் வருமானம் இன்றி தவிக்கும் மீனவர் குடும்பத்தினருக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி உள்ளார் தர்ஷா குப்தா.

இதுகுறித்து கூறுகையில், “என்னால் முடிந்த சிறிய உதவியை செய்து உள்ளேன். மற்றவர்களும் இதுபோன்றவர்களுக்கு உதவ வேண்டும். தொடர்ந்து இதுபோன்ற சேவைகளை இந்த இக்கட்டான காலகட்டத்தில் செய்து மக்களின் துயர் துடைக்க என்னால் இயன்ற பணிகளைச் செய்வேன்” என கூறினார்.

மீனவர் குடும்பங்களுக்கும், சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கும், கொரோனா தடுப்பு பணியில் இருப்பவர்களுக்கும், பொதுமக்களுக்கும் தர்ஷா குப்தா செய்த உதவியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே…

 

https://bit.ly/3vAAZ2c

 

=========================

error: Content is protected !!
Open chat