December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

நடிகை சாந்தினியா? அது யார்! முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கேள்வி

சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான நாடோடிகள் படத்தில் நடித்த நடிகை சாந்தினி தேவா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் என்னை திருமணம் செய்வதாக கூறி ஒரே வீட்டில் 5 ஆண்டுகளாக வசித்து வந்தோம்.

என்னை கர்ப்பமாக்கி கருகலைப்பு செய்ய வைத்தார். ஆனால் தற்போது என்னை திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றுவதோடு அடித்து துண்புறுத்தி என்னுடைய அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும் மிரட்டுகிறார்.

மேலும் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இருவரும் சேர்ந்து இருந்த புகைப்படங்கள் மற்றும் மிரட்டல் விடுத்த குறுஞ்செய்தி உள்ளிட்டவற்றையும் அவர் வெளியிட்டார்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன், நடிகை சாந்தினி யார் என்றே எனக்கு தெரியாது என்று பதிலளித்துள்ளார்.

======================

 

error: Content is protected !!
Open chat