October 17, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

பெற்றோரை இழந்த குழந்தைகள் அரசு காக்கும்!

பெற்றோரை இழந்த குழந்தைகள் அரசு காக்கும்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு,

கொரோனா தொற்றினால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு உதவிகளை வழங்கிட மாவட்ட அளவில், மாவட்ட சிறப்புப் பணிப் பிரிவு (Task Forco) அமைக்கப்பட்டுள்ளது.

பெற்றோரை இழந்து ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளின் பெயரில் தலா 5 இலட்சம் ரூபாய் வைப்பீடு செய்து, அந்தக் குழந்தைக்கு 18-வயது நிறைவடையும் போது வட்டியோடு வழங்கப்படும்.

பட்டப் படிப்பு வரையிலான கல்வி – விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்கும்.

கொரோனா நோய்த் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக மூன்று இலட்சம் ரூபாய் வழங்கப்படும்.

உறவினர் / பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் தலா 3 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை, அவர்கள் 18 வயது வரையில் வழங்கப்படும்.

ஏற்கெனவே தாய் அல்லது தந்தையை இழந்து, தற்போது கொரோனா தொற்றினால் மற்றொரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கும் ரூபாய் 5 இலட்சம் வைப்பீடு செய்யப்படும்.

அரசு இல்லங்கள், விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும்; அரசு நலத்திட்டங்களிலும் முன்னுரிமை அளிக்கப்படும்.

உதவித் தொகை, அவர்களது கல்வி மற்றும் வளர்ச்சி சிறப்புக் குழுவால் கண்காணிக்கப்படும்.

error: Content is protected !!
Open chat