January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தேசிய அளவில் ட்ரெண்டான #GoBackStalin ஹேஷ்டேக்; பதிலடி கொடுத்த தி.மு.கவினர்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொடர்பான பணிகளை ஆய்வு செய்வதற்காக கோவை சென்றார். மேலும் ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் முதல்வர் இன்று ஆய்வு செய்தார்.

முன்பெல்லாம் தமிழகத்திற்கு இந்தியா பிரதமர் மோடியோ, இந்தியா உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ வருகைத்தரும் போதெல்லாம் திமுக.வினர் ‛GoBackModi, GoBackAmitshah’ என்னும் ஹேஸ்டேக்கை டிரெண்டாக்கி வந்தனர்.

தற்போது, அதுவே, திமுக.,வுக்கு எதிராக திரும்பியுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின், கோவிட் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள இன்று கோவை சென்றார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் டுவிட்டரில் ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கியுள்ளனர்.

இந்த சூழலில் ட்விட்டரில் #GoBackStalin என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது. குறிப்பாக நண்பகல் நேரத்தில் இந்த ஹேஷ்டேக் தேசிய அளவில் முதலிடம் பிடித்து பரபரப்பை ஏற்படுத்தியது.

சொந்த மாநில மக்களே முதல்வர் திரும்பிச் செல்ல வேண்டும் என்று சமூக வலைதளங்களில் எதிர்ப்பை காட்டுவது தமிழகம் காணாத நிகழ்வாக இருக்கிறது.

சொந்த மாநில மக்களால் தமிழக முதல்வருக்கு எதிரான ஹேஸ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தி.மு.க.வினர் #WeStandWithStalin என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கினர்.

https://bit.ly/3c6FUA9
=============

error: Content is protected !!
Open chat