December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

நல்ல வேளை ‘ஐயா’ படத்துல அவங்க நடிக்கல…!! நடிச்சிருந்தா நமக்கு நயன்தாரா எப்படி கிடச்சிருப்பாங்க!!!

சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்து சூப்பர் ஹிட்டான ஐயா படத்தில் கதாநாயகி வேடத்தை தவறவிட்டதாக பிரபல நடிகை ஒருவர் பேட்டி அளித்துள்ளார்.

சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் ஐயா. இப்படம் 2005 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார். இதுவே நயன் தாரா தமிழில் அறிமுகமான முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட நயன்தாரா கிட்டத்தட்ட 16 வருடங்கள் சினிமா உலகில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார். இன்றும் தமிழில் நம்பர் 1 நடிகை நயன்தாராதான் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே.

இந்த நிலையில், ஐயா படத்தில் முதலில் கதாநாயகி வேடத்திற்கு தேர்வானவர் நவ்யா நாயர்தானாம்.

 

இதை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நவ்யா நாயர் கூறியிருக்கிறார். ஐயா படத்தை ஏன் நிராகரித்தார் என்று கேட்டதற்கு, மலையாள சினிமாவில் கவனம் செலுத்தி வந்ததுதான் முக்கிய காரணம் என்று கூறி இருக்கிறார். நயன்தாராவை போலவே நவ்யா நாயரும் கேரளாவை சேர்ந்தவர்தான். அவரும் சிறந்த நடிகை தான் என்றாலும், அவர் வாய்ப்பை தவற விட்டதால்தான் நமக்கு நயன்தாரா கிடைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.

 

error: Content is protected !!
Open chat