January 23, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கொரோனா 3-வது அலை வருகிற செப்டம்பர் மாதம் தாக்கும்!

கொரோனா 3-வது அலை வருகிற செப்டம்பர் மாதம் தாக்கும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.சரஸ்வத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் பேசிய அவர், கொரோனாவின் 2-வது அலையை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகள், ஆக்சிஜன் வங்கிகள் உருவாக்கல், ஆக்சிஜன் வினியோகத்துக்கு தொழில்துறையின் உதவிகள் போன்றவற்றால் சிறப்பாக நிர்வகித்திருக்கிறோம் என்றார்.

இதன் காரணமாக புதிய தொற்று எண்ணிக்கை சரிந்து வருவதாக கூறிய அவர், இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலையும் தவிர்க்க முடியாது என நிபுணர்கள் மிகவும் தெளிவாக கூறியிருக்கிறார்கள் என்றார்.

இந்த அலை செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் தொடங்கும் என்று கூறப்படுவதால் இதை எதிர்கொள்வதற்காக அனைத்து முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

==============

error: Content is protected !!
Open chat