July 29, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

முகநூல் நண்பர்கள் குழு சார்பில் ஏழை எளியோருக்கு கொரோனா நிவாரண உதவிகள்

சேரன்மகாதேவி யில் முகநூல் நண்பர்கள் குழு சார்பில் ஏழை எளியோருக்கு கொரோனா நிவாரண உதவிகள் காவல் ஆய்வாளர் சுகா தேவி வழங்கினார்

கொரோனா முழு ஊரடங்கு காரணமாக திருநெல்வேலி தூத்துக்குடி குமரி மாவட்டங்களில் வறுமையில் வாடும் ஏழை எளியவர்களுக்கு முகநூல் நண்பர்கள் குழு சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளரும் தமிழ் அஞ்சல் நாளிதழ் மாவட்ட செய்தியாளருமான நெல்லை டேவிட் தலைமையில் வறுமையில் வாடுவோரின் இல்லங்கள் தேடிச் சென்று அரிசி பைகள் காய்கறிகள் மளிகை பொருட்கள் கடந்த ஒரு மாதமாக தினமும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று மாலை திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி யில் முகநூல் நண்பர்கள் குழு சார்பில் ஏழை எளியவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முகநூல் நண்பர்கள் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும் தமிழ் அஞ்சல் நாளிதழ் மாவட்ட செய்தியாளருமான நெல்லை டேவிட் தலைமை தாங்கினார். முகநூல் நண்பர்கள் குழுவின் செயல்பாடுகளை கொண்டநகரம் டேனியல் ஆசீர் விவரித்துக் கூறினார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சேரன்மகாதேவி காவல் ஆய்வாளர் சுகா தேவி ஏழை எளியோருக்கு அரிசி பைகள் காய்கறிகள் வழங்கினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டோருக்கு முகநூல் நண்பர்கள் குழுவினர் உதவி செய்வது பாராட்டுக்குரியது. கொரோனா காலங்களில் அரசின் உத்தரவுகளை பின்பற்றி வாழ கற்றுக்கொள்ள வேண்டும். தனித்து இருப்போம் விழித்து இருப்போம் கொரோனாவை விரட்டியடிப்போம் என்றார்.

நிவாரண உதவிகளை பெற்றுக் கொண்ட ஏழை எளியோர் வறுமையில் வாடும் எங்களை கண்ணோக்கி பார்த்த முகநூல் நண்பர்கள் குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.

முன்னதாக இன்று காலை நெல்லையை அடுத்த கோபாலசமுத்திரம், நெல்லை டவுன், நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம், மேக லிங்கபுரம், பாளையங்கோட்டை சமாதானபுரம் ஆகிய பகுதிகளில் வறுமையில் வாடும் ஏழை எளியவர்களுக்கும் முகநூல் நண்பர்கள் குழு சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!
Open chat