July 29, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 3,303 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. அந்த வகையில் 6வது நாளாக இன்று கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் பதிவாகியுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவர பட்டியலில், நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 80,834 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 94 லட்சத்து 39 ஆயிரத்து 989 ஆக அதிகரித்து உள்ளது.
கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் மேலும் 3,303 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,70,384 ஆக உயர்ந்து உள்ளது. இதன்மூலம் உயிரிழப்பு விகிதம் 1.26 சதவீதமாக உள்ளது. அதே 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 062 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 80 லட்சத்து 43 ஆயிரத்து 446 ஆக உயர்வடைந்து உள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 95.26 சதவீதமாக உள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 10,26.159 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 25 கோடியே 31 லட்சத்து 95 ஆயிரத்து 048 ஆக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

error: Content is protected !!
Open chat