January 17, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

என்னைப்பற்றி இணையத்தில் பேசிய மருத்துவர் மீது புகார் – சின்மயி

என்னைப்பற்றி இணையத்தில் பேசிய மருத்துவர் மீது புகார் – சின்மயி

கவியரசு வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியது உள்பட பாடகி சின்மயி குறித்து பல விஷயங்கள் கிளப்ஹவுஸ் என்னும் குரல்வழி சமூகவலைதளத்தில் உள்ள ஒரு குழுவில் சமீபத்தில் பேசப்பட்டது. இந்த குழுவில் மருத்துவர் அரவிந்த் ராஜ் என்பவர் பாடகி சின்மயி காஞ்சிபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மனநல ஆலோசகரிடம் சிகிச்சை பெற்றதாகவும், அவரது மனநலம் அப்படி இப்படி  என்றும் தனக்குத் தெரியும் என்றும் கூறினார்.

இந்த குழுவில் இணைந்த சின்மயி தன்னுடைய தனிப்பட்ட விவரங்களை எவ்வாறு சமூக வலைதளங்களில் பேசலாம் என சின்மயி கேள்விகள் எழுப்பினார்.

இருவருக்கும் வாக்குவாதம் நடந்ததை அடுத்து குழுவில் இருந்து மருத்துவர் அரவிந்தராஜ் வெளியேறியுள்ளார்

இந்த நிலையில் மருத்துவர் அரவிந்த்ராஜ் மீது சட்ட ரீதியிலான புகார் அளிக்க உள்ளதாக பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த மருத்துவர் மன்னிப்பு கேட்டுள்ளார் ஆனால் மருத்துவரின் மன்னிப்பை ஏற்றுக் கொள்ளாத சின்மயி காவல்துறையிடம் கண்டிப்பாக புகார் அளிப்பேன் என தெரிவித்துள்ளார்

error: Content is protected !!
Open chat