November 30, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

இசிசி கருவிகளை சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் வழங்கினார்

மாண்புமிகு வேளாண்துறை அமைச்சர் அறிவுறுத்தல் பேரில் இசிசி கருவிகளை சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் வழங்கினார்

 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில்
பகுதியில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையினை கட்டுக்குள் கொண்டு வருவது சம்மந்தமாக இன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் மருத்துவ மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பேரூராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார் அப்போது மாண்புமிகு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பண்ணீர் செல்வம் அறிவுறுத்தல் பேரில்
முட்டம் மற்றும் ஆயங்குடி சுகாதார நிலையத்திற்கு இசிசி மருத்துவ உபகரணங்களை சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் வழங்கினார்.

மேலும் காட்டுமன்னார்கோயில் லால்பேட்டை குமராட்சி உள்ளிட்ட கடைவீதி பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பை தீவிர படுத்தவும் ஒலிபெருக்கி மூலம் கிராம் ஊராட்சிகளில் பொதுமக்கள் தடுப்பு ஊசி போட்டு கொள்வதன் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது இதில் வட்டாட்சியர் இராமதாஸ் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் (கிராம ஊராட்சி) சுகுமார் வட்டார மருத்துவ அலுவலர் மங்கையர்க்கரசி
பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் துரைராஜ் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மணவாளன்
ராதாகிருஷ்ணன் நாகராஜன் இளந்தமிழன் ஆற்றல் அரசு
பண்ணீர் ஞானதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

நன்றி
செய்தியாளர்
விஜயகுமார்

error: Content is protected !!
Open chat