November 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்க தலைவரே!

தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்க தலைவரே!

உங்களுக்கு கைநிறைய சம்பளம், ஏசி அறையில் சொகுசு வாழ்க்கை.
அதிக சம்பளம் தரும் நிறுவனங்கள் கிடைத்தால், தாவி தாவி செல்வது, எழுதி தந்ததை மனப்பாடம் செய்து அரை மணி நேரம் கேமரா முன் பேசுவது தான் உங்கள் சங்கத்தில் உள்ளவர்களின் வேலை.

ஆனால்,
மழை, வெள்ளம், வறட்சி, வெயிலின் தாக்கம் என, எந்த நேரத்திலும் செய்தி சேகரிக்கும் நிருபர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பிரச்சனைகள் உணர்ந்து, அவர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தான் தமிழ் நாடு அரசு பல சலுகைகளை வழங்கி வருகிறது.

கொழுத்த சம்பளம் வாங்கும், செய்தி வாசிப்பாளர்களுக்கு என்ன பிரச்னை இருக்கிறது என்று புரியவில்லை.

மத்திய அரசிடம் RNI அனுமதி பெற்று வருடாந்திர கட்டணம் செலுத்தி, தனது சொந்த பணத்தை கொண்டு, பத்திரிகை அச்சடித்து, அந்த பத்திரிகையை எடுத்து கொண்டு,
அடித்தட்டு மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் இடமான,
தலைமைச்செயலகம், காவல்துறை அலுவலகம் மற்றும் அரசு அலுவலர்கள், அதிகாரிகளுக்கு வழங்கி மக்கள் சேவை செய்வதை,
தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கம் தவறாக சித்தரித்து உள்ளது, கண்டனத்துக்குரியது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள பட்டித்தொட்டி, குக்கிராமங்களின் செய்திகள் அனைத்தும் பிரபல நாளிதழ்களில் வெளியாகுமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சிறிய அளவில் உள்ள செய்தி நிறுவனங்களின் பத்திரிகைகள் மூலம் பொதுமக்களின் பல பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?

ஒட்டுமொத்தமாக, சிறு நிறுவனங்கள் நடத்தும் பத்திரிகைகளில் சேவையாக பணியாற்றும் நிருபர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்களை வேதனைக்குள்ளாக்க வேண்டாம்.

2017 ஆம் ஆண்டு தமிழ் செய்தி வாசிப்ப்பாளர்கள் சங்கம் ஆரம்பித்த உங்களுக்கு,
பத்தாண்டுகளுக்கு மேலாக உழைத்து கொண்டிருக்கும் நிருபர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்களை பற்றி என்ன தெரியும்?

இனியும் சிறு நிறுவனங்கள் நடத்தும் அச்சு ஊடகங்களை சீண்டுவது கண்டனத்துக்குரியது.

ராபர்ட் ராஜ்
மாநில தலைவர்
நான்காம் தூண் பாதுகாப்பு சங்கம்
9842 77 77 33

error: Content is protected !!
Open chat