October 17, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் பொதுச் செயலாளர்கேப்டன் விஜயகாந்த் அவர்கள் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக முதல்வர் அறிவிப்பையடுத்து கேப்டன் கடும் கண்டனம்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா அரசு 9000 கோடி ரூபாய் செலவில் அணை கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த அணையில் இருந்து 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.

மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். இந்த திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கின்ற சூழலில் கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, மேகதாது அணை கட்டப்படும் என அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது.

எனவே, மேகதாது அணைக் கட்டும் முடிவினை கர்நாடகா அரசு உடனடியாக கைவிட வேண்டும். தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க, அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும். மேகதாதுவில் அணை கட்டும் பணியை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவை கலைத்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்.

என தேமுதிக பொதுச் செயலாளர்கேப்டன் விஜயகாந்த்  தனது அறிக்கையில் குறிபிட்டுள்ளார்

error: Content is protected !!
Open chat