January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஐயா இளையபெருமாள் 98 வது பிறந்தநாள் தினம் கொண்டாடப்பட்டது

ஐயா இளையபெருமாள் 98 வது பிறந்தநாள் தினம் கொண்டாடப்பட்டது

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் பகுதியில் தென்னாட்டு அம்பேத்கர் என அனைவராலும் அழைக்கபடும் சமுதாய பெருந்தலைவர் ஐயா இளையபெருமாள் அவர்களின் 98 ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது காட்டு மன்னார்கோயில் முக்கிய கடை வீதி பகுதியில் அமைந்துள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு ஆதி திராவிட மகா ஜன சங்கத்தின் சார்பாக அதன் செயலாளர் DKM வினோபா தலைமையில் சங்கத்தின் தலைவர் அய்யா சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் நிகழ்ச்சியில் துணைத்தலைவர்கள் LEP. சுரேஷ் குமார் திருமுட்டம் தமிழ்வாணன் பொருளாளர் அன்பழகன் துணை செயலாளர் வீரமணி வழக்கறிஞர் செல்வகுமார் மற்றும் இணை செயலாளர் இமய ராஜ் சங்கத்தின் மூத்த ஆலோசகர் தங்க ஜெயராமன் சிதம்பரம் செல்லப்பிள்ளை தங்க பாஸ்கரன் இளையபெருமாள் பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள் மேலும் சங்கத்தின் முக்கிய தீர்மானமாக சமுதாயத் தலைவர் எல் இளைய பெருமாள் அவர்களுக்கு கடலூர் மாவட்டத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று முன்மொழியப்பட்டு தீர்மானத்தின்படி தமிழக முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்ல இருக்கிறது

 

error: Content is protected !!
Open chat