September 27, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

திமுகவில் இணைந்த அதிமுக, மநீம கட்சியினர்…!!!

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கியதிலிருந்து அவருடன் பயணித்தவர் மகேந்திரன். மருத்துவரான மகேந்திரன் தனி அமைப்பு ஒன்றை நடத்தி வந்தார். பின்னர் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். கட்சியின் ஆரம்பக்காலத் தலைவர்களில் ஒருவராக, துணைத் தலைவராக கமலுடன் இணைந்து பயணித்தார். சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வியை சந்தித்த நிலையில், அக்கட்சியில் இருந்து மகேந்திரன் விலகினார். இந்த நிலையில் மகேந்திரன் நேற்று திமுகவில் இணைந்தார்.ப்தன்னுடன் கட்சி நிர்வாகிகள் 78 பேர் இணைவதாகவும், கொரோனா பெருந்தொற்று காரணமாக கூட்டம் கூட முடியாத நிலையில் தன்னுடன் கட்சியில் இணைய விரும்பும் கட்சித் தொண்டர்கள் 11,000 பேர் கொண்ட பெயர்ப் பட்டியலையும் திமுக தலைவரான முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தார்.
இதேபோல, அதிமுக முன்னாள் எம்.பி. விஜிலா சத்தியானந்த் திமுகவில் இணைந்துள்ளார். நெல்லையை சேர்ந்த விஜிலா சத்யானந்த், அதிமுகவில் ராஜ்யசபா எம்.பியாக பதவி வகித்தவர். இவர் சென்னை அண்ணா அறிவாலயம் வந்து திமுகவில் தம்மை இணைத்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மகளிருக்கு கொடுத்த முன்னுரிமை போல் தற்போது அதிமுகவில் மகளிருக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை என புகார் கூறினார்.
இதைத்தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில சுற்றுச்சூழல் செயலாளராக இருந்த பத்ம பிரியாவும் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்.

 

 

 

error: Content is protected !!
Open chat