November 27, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

நாம் தமிழர் சீமான்

அணைகட்டியுள்ள கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்காது ஏன்? – சீமான்

தென்பெண்ணையாற்றின் குறுக்கே பிரம்மாண்ட அணைகட்டியுள்ள கர்நாடக அரசு மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்காது தமிழ்நாடு அரசு அமைதி காப்பது ஏன்?

கட்டியது குறித்து எவ்விதக் கண்டனமோ, நடுவர்மன்றம் அமைப்பது குறித்து எவ்வித முன்நகர்வோ இல்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது மட்டுமின்றி, தமிழக அரசின் நிர்வாகத் தோல்வியையும் வெளிக்காட்டுவதாய் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி, ஊரடங்குக் காலத்தைப் பயன்படுத்தி, அத்துமீறி தமிழக எல்லைக்கு மிக அருகில் கட்டப்பட்டுள்ள புதிய அணைக்குத் தேவையான கட்டுமானப்பொருட்களான மணல், பைஞ்சுதை (சிமெண்ட்), கல் ஆகியவை தமிழகத்திலிருந்துதான் கொண்டு செல்லப்பட்டன என்று வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

கர்நாடக அணை கட்டுவதற்குத் தேவையான கட்டுமானப்பொருட்கள் தமிழகத் திலிருந்து எப்படிக் கொண்டு செல்லப்பட்டது? எல்லையில் அதிகாரிகள் அதனை ஏன் தடுக்கவில்லை? அவ்வாறு கொண்டு செல்லப்படும்வரை கிருட்ணகிரி மாவட்ட மக்கள் பிரதிகளான பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்? அவர்களுக்குத் தெரியாமல் இது நடந்ததா? அல்லது அவர்களின் துணையோடு முறைகேடாக இது நடைபெற்றதா? என்ற எந்தக் கேள்விக்கும் பதிலில்லை. இன்னொருபுறம், காவிரி நதிநீர் உரிமையைப் பெறுவதற்கு அரை நூற்றாண்டு காலமாக நடைப்பெற்ற பல்வேறு கட்டப்போராட்டத்திற்குப் பிறகும்கூட மிகச்சொற்ப அளவு நீரையே தமிழ்நாடு பெறும்படி நேரிடுகையில், அதையும் தடுக்கும் விதமாக கர்நாடக அரசு பாஜக அரசின் துணையுடன் மேகதாது அணையைக் கட்டத் தீவிரமாக முயற்சியெடுக்கிறது எனும் செய்தி பெருங்கவலையைத் தருகிறது.

காவிரி தென்பெண்ணைப் பாலாறு – தமிழ் கண்டதோர் வையைப் பொருனை நதி மேவிய யாறுகள் பலவோடத் – திரு மேனி செழித்த தமிழ்நாடு ! என

எனும் பெரும்பாவலன் பாரதியின் பாடல் வரிகளிலுள்ள ஆறுகள் ஐம்பதாண்டு காலத் திராவிடக்கட்சிகளின் ஆட்சிகளினால் இன்று உயிர்ப்போடு இல்லை. அடுத்தத் தமிழ்த்தலைமுறை இப்பாடலில் மட்டும் தான் ஆறுகளைப் பார்க்கமுடியும் என்பதைப்போலக் கடந்த பத்தாண்டுகளில் இரு திராவிடக் கட்சிகளும் மாறிமாறி 37க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தங்கள் கைகளில் வைத்திருந்தபோதும், காவிரி, தென்பெண்ணை என வரிசையாகத் தமிழகத்தின் வாழ்வாதார நதிநீர் உரிமைகளைக் கண்ணுக்குமுன் காவுகொடுத்து நிற்கதியற்று நிற்கச் செய்திருக்கிறது.

ஆகவே, தமிழகத்தைப் பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் நயவஞ்சக முயற்சிகளை முறியடிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு இனியாவது விழிப்புடன் செயல்பட்டு, அத்துமீறிக் கட்டுப்பட்டுள்ள அணை குறித்தும், தென்பெண்ணையாறு நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பாகவும் உடனடியாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் எனவும், தென்பெண்ணையாற்று அணைபோல அலட்சியமாக இருந்துவிடாமல் காவிரியாற்றின் குறுக்கே கர்நாடக அரசு கட்ட முயற்சிக்கும் மேகதாது அணையை எவ்வித சமரசமுமின்றிச் சட்டப்போராட்டம் நடத்தித் தடுத்து நிறுத்தி தமிழகத்தின் நதிநீர் உரிமையை நிலைநாட்ட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். என்று நாம் தமிழர் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!
Open chat