September 27, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

வீர வாஞ்சிநாதன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் தென்காசி ஆட்சியர்

வாஞ்சி நாதன்நினைவு நாள் தென்காசி ஆட்சியர் மலர் தூவி மரியாதை

தென்காசி மாவட்டம் செங்கோட்டை, முத்துச்சாமி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள வீர வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்குவகித்தவர் வீர வாஞ்சிநாதன் 

1911-ம் ஆண்டு ஜூன் 17-ம் தேதி நெல்லை ஆட்சியராக இருந்து ஆஷ்துரை
என்பவரை மணியாச்சி இரயில்வே நிலையத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். அதன் பிறகு அதே துப்பாக்கியால் தன்னையும் மாய்த்துக்கொண்டார்.

அவரின் சுதந்திர போராட்ட ஈடுபாட்டை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 17-ம் தேதியில் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டவும், ஜுன் 17-ம் தேதி நினைவு நாளாக அனுசரிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டதற்கிணங்க செய்திமக்கள் தொடர்புத்துறையின் மூலம் ஆண்டுதோறும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை, முத்துச்சாமி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள வீர வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி இன்று (17.07.2021) சுதந்திர போரட்ட வீரர் வீர வாஞ்சிநாதன் அவர்களின் 135-வது பிறந்தநாளை செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கோபால சுந்தர ராஜ் இ.ஆ.ப., சுதந்திர போரட்ட வீரர் வீர வாஞ்சிநாதன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.கருப்பணராஜவேல், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.லெனின்பிரபு, செங்கோட்டை வட்டாட்சியர் திருமதி.ரோஷன் பேகம், செங்கோட்டை நகராட்சி ஆணையாளர் திருமதி.நித்யா மற்றும் அரசு அலுவலகர்கள் கலந்து கொண்டனர்

 

error: Content is protected !!
Open chat