November 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

டாக்டர் அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி., இணையவழி ஓவியப்போட்டி-2021

மதுரையில் டாக்டர் அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி., இணையவழி ஓவியப்போட்டி-2021

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர்
அப்துல் கலாம் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு இணையவழி வண்ண ஓவியப்போட்டி நடைபெறவுள்ளது..

இதில் மதுரையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் மட்டும் பங்கேற்கலாம்…

டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகளை முன்வைத்து மற்றும் குறிப்பிட்டு ஓவியங்கள் வரையப்பட்டு இருக்க வேண்டும்…

ஓவியத்தின் கீழ் பகுதியில் போட்டியாளரின் பெயர், வகுப்பு, பள்ளியின் பெயர் மற்றும் போட்டியாளரின் தனி புகைப்படம் ஆகியவை தெளிவாக இடம்பெற்று இருக்க வேண்டும்.

மேலும் அரசுப்பள்ளியில் படிப்பதற்கான ஏதேனும் சான்று இணைக்கப்பட வேண்டும்.

29.07.2021 வியாழக்கிழமை வரை ஓவியங்களை 9597589843 என்ற வாட்ஸ்அப் எண்ணில் மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.

நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஓவியங்களின் வெற்றியாளர்களுக்கு அழைப்பேசி மூலம் சான்றிதழ் வழங்கப்படும் விபரங்கள் தெரிவிக்கப்படும்.

மேலும் போட்டி பற்றிய விபரங்களுக்கு மட்டும் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டனை அதே எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

 

நன்றி
மதுரை செய்தியாளர்      S.பெரியதுரை

error: Content is protected !!
Open chat