December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

காவலர்களுக்கு விடுமுறை கேப்டன் வரவேற்பு

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் காவலர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு வரவேற்பு

 

தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் விடுமுறை இன்றி பணியாற்றுவதால், அவர்கள் மன வேதனையும் மன சோர்வும் அடைந்தனர். பலர் மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் வாரம் ஒருமுறை விடுமுறை வழங்க வேண்டும் என்று காவலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். நீண்ட ஆண்டுகளாக அவர்கள் விடுத்த வந்த கோரிக்கையை ஏற்று, வாரத்தில் ஒருநாள் விடுமுறை வழங்கப்படும் என தற்போது அறிவித்திருப்பது காவலர்களுக்கு இனிய செய்தி. மேலும் பிறந்தநாள் மற்றும் திருமண நாட்களிலும் காவலர்களுக்கு விடுமுறை அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். காவலர்களுக்கு விடுமுறை அறிவித்த டிஜிபி சைலேந்திர பாபுவுக்கும், தமிழக அரசுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.என கேப்டன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

error: Content is protected !!
Open chat