December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

இனி தமிழ்நாடு பாடநூல் கழகமும், திராவிடகழகமும் ஒன்றே – அர்ஜுன் சம்பத்

அர்ஜுன்சம்பத் அறிக்கை!

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே நியாயம்தானா ?

இனி தமிழ்நாடு பாடநூல் கழகமும், திராவிடகழகமும் ஒன்றே…

தமிழ்நாடு பாடத்திட்ட நிறுவன அறிவுரை குழுவின் உறுப்பினராக சுப.வீரபாண்டியனை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..

‘தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் (Tamilnadu Textbook and Educational Services Corporation) தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்குப் பாடப் புத்தகங்களைத் தயாரித்து, அச்சிட்டு விநியோகம் செய்வதற்காகத் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட ஓர் அரசு நிறுவனம் ஆகும். இக்கழகம் மூலம் அச்சிடப்படும் பாடநூல்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயிக்கும் கட்டணத்திலும் வழங்கப்படுகின்றன.

ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழிப் பாடநூல்கள், சிறுபான்மை மொழிப் பாடநூல்கள், மேல்நிலைப் பள்ளிக்கான தொழிற்கல்விப் பாடப் புத்தகங்கள் ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்கான பாடப் புத்தகங்கள் மற்றும் பல்நுட்பக் கல்லூரிக்கான பாடப் புத்தகங்கள் ஆகியவற்றைத் தயாரிக்கும் பணியை இக்கழகம் மேற்கொண்டு வருகின்றது.

இந்நிறுவனத்தின் புதிய தலைவராக காமெடியன் திண்டுக்கல் ஐ.லியோனியை, முதல்வர் ஸ்டாலின் நியமனம் செய்து கடந்த 7 ஆம் தேதி ஆணையிட்டார்.

இந்நிலையில் தற்போது தமிழ்நாடு பாடத்திட்ட நிறுவன அறிவுரை குழுவின் உறுப்பினராக காமுகன் சுப.வீரபாண்டியனை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.(அடுத்து சுந்தரவள்ளியும்,கீ.வீரமணியும் வரகூடும்..)

ஆதாலால் இனி தமிழ்நாடு பாடநூல் கழகமும், திராவிடகழகமும் ஒன்றே…

ஸ்டாலின் ஆட்சியை கல்வியின் இருண்டகாலமாக வரலாறு நிச்சயமாக பதிவு செய்யும்..

தலைமை செயலாளர் இறையண்பு அவர்கள் வருங்கால நமது மாணவர்களின் நலனில் மிகவும் அக்கறை கொண்டு பல பல கட்டுரைகளும்,மேடை பேச்சுகளும்,வீடியோக்களும் வெளியிட்டவர். அவர் இந்த கூற்றை எல்லாம் ஏற்றுக்கொள்கிறாரா..?

சட்டம் ஒழுங்கு,லஞ்ச லாவண்யம்,பொருளாதாரம் எது வேண்டுமானாலும் பாதித்தாலும் அதைப்பற்றி கவலையில்லை..ஆனால் வருங்கால மாணவர்களை தவறான வழிக்கு கொண்டு சென்றால்,இதைவிட மகாபாதகம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.

இதற்கு எதிர்த்து குரல் கொடுக்க எதிர்கட்சிகளோ,நடுநிலையாளர்களோ,கல்வியாளர்களோ,பெற்றோர்களோ,மீடியாக்களோ,நீதிமன்றமோ இல்லாமல் போனது வேதனையானது மட்டுமல்ல..வெட்ககேடானதும் கூட..

தமிழக அரசே! மு க ஸ்டாலின் அவர்களே! உடனடியாக முடிவினை வாபஸ் வாங்கு! தமிழ்நாடு பாடநூல் வாரியத்தை திராவிடர் கழகமாக மாற்றாதே! தமிழகம் முழுவதும் கோரிக்கை மற்றும் புகார் மனு சமர்ப்பிக்கும் போராட்டம்!
இந்து மக்கள் கட்சியின் சார்பில் நடத்தப்படும். என அர்ஜூன் சம்பத் அறிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!
Open chat