January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கூட்டுறவு பணியாளர்கள் கால அவகாசம் வேண்டி வேலை நிறுத்தம் 

கூட்டுறவு பணியாளர்கள் கால அவகாசம் வேண்டி வேலை நிறுத்தம் 

கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோயில் ஞான வினாயகர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் வளாகத்தில் இன்று காட்டு மன்னார் கோயில் பகுதிகளில் இயங்கி வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் அலுவலக பணியாளர்கள் மற்றும்           விற்பனையாளர்கள்

1 நகை கடன் தள்ளுபடி விவகாரத்தில் தமிழகஅரசு தெளிவான சுற்றறிக்கை வெளியிட வேண்டும் எனவும் நகைகடன் பெற்றவர் களின் விபரங்கள் சேகரிக்க கால அவகாசம் வழங்க வேண்டியும்

2 மேலும் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் விற்பனை யாளர்கள் ஊதியம் இன்றி பணிசெய்து வருகின்றனர் இவர்கள் வாழ்வாதாரத்தை காக்க ஊதியம் வழங்கிட வலியுறுத்தியும்

3. கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய விற்பனை யாளர்களுக்கு இடைநிகழ்வு செலவினமாக ரூ/200 வழங்க வலியுறுத்தியும் இப்படி பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஒருநாள் வேலை நிறுத்தம் செய்தனர் இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி ஒன்றிய தலைவர் அருள் செல்வன் ஒன்றிய பொருளாளர் குமார் ஒன்றிய செயலாளர் கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நன்றி                                      செய்தியாளர்
விஜயகுமார்

error: Content is protected !!
Open chat