November 27, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

அம்ருத் மஹோத்சவம் 2021 கொண்டாட்டம்

சென்னை ஐஐடி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் விடுதலையின் அம்ருத் மஹோத்சவம் 2021 கொண்டாட்டம்

சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் மண்டல அளவிலான விடுதலையின் அம்ருத் மஹோத்சவ நிகழ்ச்சி காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. சென்னை மண்டலத்தைச் சேர்ந்த 6 தொகுப்புகள் இதில் கலந்துகொண்டு தேசிய அளவில் போட்டியிடுவதற்காக வெவ்வேறு பிரிவுகளில் சிறந்த படைப்புகளை அனுப்பின.

குழு பாடல்/ தனிநபர் பாடல் மற்றும் தனிநபர் நடனத்திற்கு நாட்டுப்பற்று/ கிராமிய கலை, தேசிய ஒருமைப்பாடு, சமூக ஒருங்கிணைப்பு, இளைஞர்/ மகளிர் மேம்பாடு ஆகியவை தலைப்பாக கொடுக்கப்பட்டன.

சென்னை மண்டல அலுவலகத்தின் துணை ஆணையர் திரு டி. பிரம்மானந்தம் பேசுகையில், ஒரே பாரதம், உன்னத பாரதம் திட்டத்தின் நோக்கம் பற்றி விளக்கினார். குழந்தைகளிடையே நாட்டுப்பற்றை ஏற்படுத்துவதற்காக இந்திய அரசு பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படும் இந்தியாவின் சமூக- கலாச்சாரம், அரசியல் மற்றும் பொருளாதார அடையாளங்களின் எடுத்துக்காட்டாக விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவம் விளங்குகிறது. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய சென்னை மண்டல அலுவலகத்தின் துணை ஆணையர் டாக்டர் (திருமதி) ராஜேஸ்வரி, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒவ்வொரு குழந்தையும் கொண்டாட்டங்களின் வாயிலாக கற்பதற்கு தயார்படுத்தப்படுகின்றனர் என்று கூறினார். சமூக அறிவியல், வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் மாற்றுகிறது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் வித்யாலயா மேலாண்மைக்குழு தலைவர் பேராசிரியர் பிரதாப் ஹரிதாஸ், குழந்தைகளிடையே நாட்டுப்பற்றை ஊக்குவிப்பதில் பள்ளிகள் மிகச்சிறந்த பணிகளை மேற்கொள்வதாகவும், கேந்திர வித்யாலயாவின் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததன் விதம் தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். தங்களைத் தாங்களே ஆராய்ந்து கொள்வதற்கும், தங்களது திறமைகளில் சிறந்து விளங்குவதற்கும் மாணவர்களுக்கு விரிவான வாய்ப்பு வழங்கப்படுகிறது.

தனிநபர் இசை, தனிநபர் நடனம், குழு பாடல் உள்ளிட்ட ஏராளமான போட்டிகளில் மொத்தம் 50 மாணவர்கள் மண்டல அளவில் கலந்து கொண்டனர்.

இளநிலை மற்றும் முதுநிலை பிரிவுகளில் தலா ஒருவர் வீதம் மொத்தம் நான்கு பேர் (மாணவர் மற்றும் மாணவி) கொல்கத்தா மண்டலத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். குழு பாடல், எர்ணாகுளம் மண்டலத்திலும், தனிநபர் பாடல் மண்டல அளவு வரையிலும் நடைபெறும்.

இந்த தகவல், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியின் தலைமை ஆசிரியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!
Open chat