December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

அறநிலையத்துறையின் விளம்பரம் உங்கள் பார்வைக்காக – அர்ஜுன் சம்பத்

இந்து சமய அறநிலையத்துறையின் விளம்பரம் உங்கள் பார்வைக்காக

இதில் அலுவலக உதவியாளர் Office Assistant ன் சம்பளம் எவ்வளவு பாருங்கள் ₹.50,000/-
Typist சம்பளம் ₹.60,000/-.

ஆனால் கோவிலில் உழைக்கும் அர்ச்சகர் சம்பளம் ₹.2,000/-, ₹.3,000/- கூட இல்லை. யாருடைய உழைப்பு அதிகம் ?? அர்ச்சகர்களுக்கு, பூசாரிகளுக்கு உழைப்புக்கேற்ற நியாமான ஊதியம் தரப்படுகிறதா??

ஓதுவார்கள்; பூசாரிகள், பரிசாரகர்கள், மடப்பள்ளியில் வேலை செய்கின்ற வர்கள், இசைக்கலைஞர்கள், பூக்கட்டும் கைங்கர்யம் செய்பவர்கள், சுவாமிக்கு அலங்காரம் செய்பவர்கள், இவர்களுக்கெல்லாம் என்ன சம்பளம் வழங்கப்படுகிறது.

இவர்களுக்கெல்லாம் சொற்ப ஊதியமும், கோயில் பிரசாதம் மட்டும்தான். இவர்கள் எல்லாம் அரசு ஊழியர்கள் அல்ல அரசு ஊழியர்கள் பட்டியலில் இவர்கள் இடம்பெற வில்லை. அரசு ஊழியர்களுக்கான சலுகைகளை உரிமைகளை இவர்கள் அனுபவிக்க முடியாது.

மாறாக இந்து சமய அறநிலையத் துறை ஊழியர்கள் அரசு ஊழியர் பட்டியலில் இடம் பெற்று அவர்களுக்கான பணி பாதுகாப்பு அரசு ஊழியர்களுக்கான சலுகைகளை சிறப்பாக அனுபவிக்கிறார்கள்.

ஆனால் கோயிலில் பணியாற்றுகின்ற கடவுளுக்கு சேவை செய்கின்ற அர்ச்சகர்கள்,பூசாரிகள், ஓதுவார்கள், பரிசாரகர்கள்,உழவார பணியாளர் களுக்கு அரசு ஊழியர் அந்தஸ்து கிடையாது இவர்கள் சேவை மனப்பான்மையும் அடிப்படையிலும் பாரம்பரியத்தின் அடிப்படையிலுமே பணி செய்கிறார்கள். இவர்களுக்கு பணி பாதுகாப்பும் கிடையாது.

இந்த பாரபட்சத்தை ஓரவஞ்சனை யை சரி செய்திட அரசாங்கத்தையும் ஆன்மீகப் பெரியவர்களையும் இந்து மக்கள் கட்சி பணிந்து வேண்டி கோரிக்கை புகார் மனுவை சமர்ப்பிக்கிறது.

error: Content is protected !!
Open chat