October 23, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

பிரதம மந்திரி  கிராம சாலைத்திட்ட கருத்தரங்கம்

தென்காசியில் பிரதம மந்திரி 
கிராம சாலைத்திட்ட கருத்தரங்கம்
தென்காசி
தென்காசியில் பிரதம மந்திரி கிராம சாலைத்திட்டம் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் 75-வது இந்திய சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பிரதம மந்திரி கிராம சாலை திட்டம் தொடர்பான கருத்தரங்கம் பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் தலைமையில், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் முன்னிலையில் நடைபெற்றது.
தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர்
தனுஷ் எம்.குமார்; கருத்தரங்கில் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முழுவதும் மாவட்டந்தோறும் ஒன்றிய அரசின் பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டத்தின் கீழ் சாலைகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. சாலை அமைக்கும் பணிகளுக்கு தரக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 35 திட்டங்கள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2019-ஆம் ஆண்டு துவக்கப்பட்டு ஒன்றிய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரி கிராம சாலை திட்டம் ஐஐஐ-ன் கீழ் குக்கிராமங்களில் இருந்து சந்தை, உயர்நிலைஃமேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் ஆகியவற்றை இணைக்கும் பிரதான சாலை மற்றும் முக்கிய ஊரக இணைப்பு சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணிகளை தரக்கட்டுப்பாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி மேற்கொள்ள வேண்டும். சாலை வசதிகளில் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக தென்காசி மாவட்டம் திகழ அனைத்து அலுவலர்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் கருத்தரங்கில் தெரிவித்ததாவது:-
ஒன்றிய அரசின் பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் கிராமப்புற மக்களின் வறுமையை போக்கும் வகையிலும், மக்களின் போக்குவரத்து, பொருளாதாரம் மற்றும் ஊரக சந்தைகள் மேம்பாடு அடையும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இத்திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்தில் பழுதடைந்த சாலைகளை சீரமைத்தல் மற்றும் சாலை பராமரிப்பு பணிகள் மக்கள் பயனடையும் வகையில் தரக்கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்றி சிறப்பாக மேற்கொள்ளப்பட வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள சாலைகளின் அமைப்பு, தற்போதைய நிலை, சாலைகளை பயன்படுத்துவோர், வாகனங்கள், மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளை கவனத்தில் கொண்டு சாலை பாதுகாப்பை மையப்படுத்தி அமைக்கப்பட வேண்டும். கிராமப்புறங்களில் சாலை வசதிகள் அதிகரிக்கப்படும்போது கிராமங்களின் விவசாயம் மற்றும் பொருளாதார வளர்ச்சி மேம்படும்  என்றார். மேலும், கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர்.கே.குணசேகரன்; சாலை பாதுகாப்பு முறைகள் குறித்து இணையதள வழியாக விரிவுரையாற்றினார். அதனைத் தொடர்ந்து ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் சார்பில் கலந்து கொண்ட ஸ்மித் சார்லஸ் தார் மற்றும் எமல்சன் தரம் கண்டறியும் முறைகள் மற்றும் தார்சாலையில் புதிய தொழில் நுட்பங்கள் குறித்து விளக்க உரையாற்றினார்;. இக்கருத்தரங்கில் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை நா.சரவணன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர்கள் முருகன்,  உதவி செயற்பொறியாளர் ஊரக வளர்ச்சி முகமை நித்திய கல்யாணி, மகிழமுத்து, தென்காசி மாவட்ட அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அனைத்து பொறியாளர்கள், சாலை ஆய்வாளர்கள் மற்றும் சாலை ஒப்பந்தகாரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You may have missed

error: Content is protected !!
Open chat