November 27, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

ஊனமுற்றோரை மென்மேலும் ஊனமாக்க வேண்டாம் சமூக நல அமைப்பினர் கோரிக்கை

தமிழகத்தில் ஊனமுற்றோரை மாவட்ட வழங்கல் துறை மென்மேலும் ஊனமாக்க வேண்டாமென தேனி மாவட்ட சாட்டை சமூக நல அமைப்பினர் கோரிக்கை :

தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சி 2வது வார்டு, இராதாகிருஷ்ணன் ரைஸ் மில் தெருவில் TCS:07,நியாய விலைக் கடைக்கு உட்பட்ட குடும்ப அட்டைதாரராக வசித்து வருபவர் ஜோதி,இவர் உடல் ஊனமுற்று வயது முதிர்ந்த நிலையில் எழுந்து நடக்க முடியாத சூழலில் இருந்து வருகிறார்.

தற்போது கடந்த ஆகஸ்ட் 01 முதல் பயோமெட்ரிக் முறை மூலம் தான் பொருட்கள் வழங்கிட வேண்டுமென பணியாளர்களுக்கு துறையின் மூலம் நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால்,ஊனம் மற்றும் வயது முதிர்வு காரணமாக ஜோதியை போன்று பெரும்பாலானோர் சின்னமனூர் நகராட்சி மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள கிராமப்பகுதிகளில் வீட்டை விட்டு எழுந்து நடக்க முடியாத சூழலில் உள்ளவர்கள் தமிழக அரசின் பயோமெட்ரிக் முறையினால் நேரடியாக நியாய விலைக்கடைக்குச் சென்று ரேசன் பொருட்கள் வாங்க முடியாமல் சிக்கித் தவித்து மிகவும் சிரமப்பட்டு வருகின்றார்கள்.

பயோமெட்ரிக் முறையினால் நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு அபராதத்துடன் கூடிய கட்டுப்பாடுகளை வழங்கல் துறையின் மூலம் அழுத்தம் கொடுத்து வருகின்ற சூழலில் பணியாளர்களும் வேறு வழியின்றி துறை அதிகாரிகளுக்கு கட்டுப்பட்டு ஊனமுற்றவர்களுக்கு பொருட்கள் வழங்க முடியாமலும், சொல்லவும்,மெல்லவும் முடியாமலும் புலம்பி தவித்து வருகின்றனர்.

பயோமெட்ரிக் முறை அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்படுத்துவதை கட்டுப்படுத்த கொண்டு வந்த மிகவும் அருமையான திட்டமென்பது ஒருபுறமிருக்க. ஊனமுற்றவர்களுக்கு பொருட்கள் வழங்கிட கைரேகையை தவிர்த்து மாவட்ட வழங்கல் துறையினர் தாமாக முன் வந்து கை ரேகை பதிவிற்கு மாற்று ஏற்பாடாக ஊனத்திற்காக தமிழக அரசால் கொடுக்கப்பட்ட ஊனமுற்றோர் அட்டையின் நகலை உறவினர்கள் மூலம் நியாய விலைக் கடைகளில் கொடுத்து பொருட்கள் வாங்கிச் செல்லலாம் என்பதன் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்பட்டு பொருட்கள் வழங்கப்பட வேண்டுமென தேனி மாவட்ட சாட்டை சமூக நல அமைப்பினர் தேனி மாவட்ட நிர்வாகத்துறையினருக்கும்,தேனி மாவட்ட வழங்கல் துறையினருக்கும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

நன்றி

நிருபர் வேப்பம்பட்டி சுகன்யா த.முரளிதரன்

error: Content is protected !!
Open chat