December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

நாமக்கல் மாவட்டம் வணிக நிறுவனங்களுக்கு நேர கட்டுப்பாடு

நாமக்கல் மாவட்டத்தில் வணிக நிறுவனங்களுக்கு 23/08/2021 முதல் புதிய நேரக் கட்டுப்பாடு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து நேற்று 19/08/2021 மதியம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் இணைந்து நடத்திய வணிகர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் நேரக்கட்டுப்பாடு தொடர்பாக எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் பின்வருமாறு:

வருகிற 23/08/2021 திங்கட்கிழமை முதல் காய்கறி, மளிகை, தேனீர் கடைகள், பேக்கரி உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் (பால் விற்பனையகம் மற்றும் மருந்தகம் நீங்கலாக) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

ஹோட்டல் மற்றும் சாலையோர உணவகங்கள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவை செய்ய மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

காய்கறி மொத்த வியாபாரம் நள்ளிரவு 2 மணி முதல் காலை 7 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

திருமண மண்டபங்கள் அதிகபட்சம் 50 நபர்களை கொண்டு, மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற்று நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.

மேற்படி நேரக்கட்டுப்பாட்டினை அனைத்து வணிகர்களும் முறையாக பின்பற்றி பாதுகாப்புடன் வணிகம் தொடர அன்புடன் வேண்டுகிறோம்.

மேலும் வணிக நிறுவனங்களில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்தும், கிருமிநாசினி பயன்படுத்தியும், சமூக இடைவெளி கடைபிடித்தும் செயல்பட வேண்டுகிறோம்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, நாமக்கல் மாவட்டம்.

error: Content is protected !!
Open chat