January 23, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தை தாக்கியவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கண்டன ஆர்ப்பாட்டம்.

சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தில் தாக்குதல் நடத்தியவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி தூத்துக்குடியில் பத்திரிக்கையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்து அலுவலகத்தை அடித்து நொறுக்கி சூரையாடிய ரவுடி ராஜேஷ்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு சார்பாக மாபெரும் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பத்திரிகையாளர் தொழிற்சங்கம் பொதுச்செயலாளர் இதழாளர் அய்கோ பேசும்போது, சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தை தாக்கிய நபரை உடனடியாக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, அடையாளம் காண்பிக்க வேண்டும்.
பத்திரிக்கையாளர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் அ. பிரான்சிஸ் தலைமை தாங்கினார். நிகழ்வில் மாவட்டச்செயலாளர் மார்க் மகேஷ், மாவட்ட பொருளாளர் கணேசன் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!
Open chat