October 17, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

தடுப்பூசி போடாதவர்கள் கடையில் பணிபுரிய அனுமதி இல்லை 

தடுப்பூசி போடாதவர்கள் கடையில் பணிபுரிய அனுமதி இல்லை 

கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோயில் பேரூராட்சிக்கு உட்பட்ட கடைவீதியில் கொரோனா தடுப்பூசி போடாத நபர்கள் கடை நடத்தவோ கடையில் பணிபுரிய வோ அனுமதி கிடையாது என பேரூராட்சி நிர்வாகத்தின்மூலமாக அறிவிப்பும் செய்யப்பட்டது அதனடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலை வர் ஆணைக்கி ணங்க வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வெங்கடேசன் தலைமையில் டாக்டர் அருள்மொழி தேவன் டாக்டர் தங்கதுரை டாக்டர் அமுதன் ஆகியோர் கொண்ட மருத்துவ குழு தலைமையில் மூன்று குழுக்களாகப் பிரிந்து ஒவ்வொரு கடை கடையாக சென்று தடுப்பூசி போடாதா நபர்களை கண்டுபிடித்து தடுப்பூசி செலுத்தப் பட்டது பொது மக்களும் வியாபாரி களும் மிகுந்த ஆர்வத்துடன் தடுப்பூசியை செலுத்தி கொண்டனர்.

இந்த மருத்துவ குழுவினருடன் பேரூராட்சி நிர்வாகம் ஈடுபடுத்திக்கொண்டு கொரோனா நோய்த் தடுப்பு ஊசி அவசியத்தை பொது மக்களுக்கு எடுத்துரைத்து பொதுமக்கள் அனைவரும் இந்த தடுப்பு ஊசி பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அனைவரையும் நோய் தடுப்பு ஊசியை போட வைத்தனர் மருத்துவ குழுவினருடன்சுகாதார பணியில் துப்புரவு ஆய்வாளர் துரைராஜ் சுகாதார ஆய்வாளர்கள் செந்தில் மற்றும் தமிழரசன் சுகாதார செவிலியர்கள் செந்தில் குமார் குமுதா சுகாதார பணியாளர்கள்மணி ஜெய குரு ஆகியோர் பணியில் ஈடுபடுத்திக் கொண்டனர்.

நன்றி                                      செய்தியாளர்.                        விஜயகுமார்

error: Content is protected !!
Open chat