October 23, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

13 டாஸ்மாக் கடைகள் மூடஆட்சியர் உத்தரவு

 

தென்காசி மாவட்டத்தில் வரும் செப்.1ம் தேதி பூலித்தேவர் பிறந்த நாளை முன்னிட்டு 13 இடங்களில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், நெற்கட்டும் செவல் கிராமத்தில் 01.09.2021 அன்று சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவர் ன் 306 வது பிறந்த நாளை முன்னிட்டு ‘சட்டம் ஒழுங்கு” பராமரிப்பினை மேற்கொள்ளும் வகைக்காக சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி கீழே குறிப்பிட்ட 13 மதுபானக் கடைகளை மட்டும் 01.09.2021அன்று ஒரு நாள் மட்டும் காலை 10.00 மணி முதல் மாலை 06.00 வரை மூடிடஉத்தரவிடப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் திருவேங்கடம் ரோடு-1, ரயில்வேபீடர் ரோடு-2, சுரண்டைரோடு-1, தெற்குரதவீதி-1,இராஜபாளையம் ரோடு-2, இரத்தினபுரி நவா சாலை-1, புளியங்குடி பாம்புகோவில் சந்தைரோடு-2, டி.என்.புதுக்குடி-1, வாசுதேவநல்லூர்.-1, தேவிபட்டிணம்.-1.
மேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

You may have missed

error: Content is protected !!
Open chat