January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

விபத்தை ஏற்படுத்தி ஆளைக் கொன்று தப்பிச்சென்ற அரசு பேருந்து ஓட்டுநர் 

விபத்தை ஏற்படுத்தி ஆளைக் கொன்று தப்பிச்சென்ற அரசு பேருந்து ஓட்டுநர் 

பொதுமக்கள் விரட்டி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கொல்லன் விளை பகுதியில் யமஹா ஷோரூம் முன்பு களியக்காவிளையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு பேருந்து சாலையோரமாக தம்பதிகளாக சென்ற இருசக்கர வாகனத்தில் இடித்து அதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவரின் தலையில் பேருந்தின் சக்கரங்கள் ஏறி இறங்கியதில் இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் சென்று கொண்டிருந்தவர் சம்பவ இடத்தில் பலியானார்.

உடனே பேருந்தை நிறுத்திய அதன் ஓட்டுநர் பளுகல் பகுதியை சேர்ந்த மோகனன் என்பவரின் மகன் ரமேஷ், பேருந்தின் சக்கரம் ஏறி தலை நசுங்கியவரின் உடலை கண்டவுடன் நைசாக பேருந்தை எடுத்துக்கொண்டு அவ்விடம் விட்டு விரைந்து சென்றார். பேருந்தில் இருந்த பயணிகள் சத்தமிட்டும் அவர் பேருந்தை நிறுத்தவில்லை மேலும் அப்பகுதியில் விபத்தை நேரில் பார்த்த இளைஞர்கள் ஒரு சிலர் பேருந்தை துரத்திச் சென்று குமார கோயில் அருகே பேருந்தை சிறைபிடித்து நெடுஞ்சாலை ரோந்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சம்பவத்தில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்து பலியானவரின் மனைவி கணவரின் உடலைப் பார்த்து கதறி அழுதது மிகவும் பரிதாபப்பட வைத்தது. மேலும் பேருந்து இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து கொண்டு இருந்தவரின் மனைவியின் முதுகில் இடித்ததில் தான் வாகனம் தடுமாறியதில் அவர் கீழே விழுந்ததும் அதனால் இரு சக்கர வாகனம் தடுமாறி சரிந்ததில் வாகனத்தை ஓட்டி வந்தவரின் கணவர் பேருந்தின் சக்கரம் ஏறி தலை நசுங்கி இறந்ததும் மனைவி படுகாயம் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

முதுகில் பலத்த காயம் அடைந்த அவர் மனைவி தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் விபத்து நடந்த சம்பவ இடத்திற்கு அருகே தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் சம்பவம் குறித்து அறிந்தவுடன் மீட்பு பணியில் ஈடுபட்டதுடன் பேருந்தில் தலை நசுங்கி உயிரிழந்தவரின் சடலத்தை தீயணைப்பு மற்றும் மீட்பு துறை வாகனத்திலேயே விரைந்து அவ்விடத்தில் இருந்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

விபத்து நடந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வாகனம் விபத்தில் உயிரிழந்தவரின் உடலை மீட்டு மின்னல் வேகத்தில் கொண்டு சென்றது பொது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன் அவர்களின் விரைந்த சேவைக்கு பாராட்டு தெரிவித்தனர். ஆனால் விபத்து ஏற்படுத்திவிட்டு உயர் பலியான சம்பவம் தெரிந்தவுடன் அரசு பேருந்தை அந்த இடத்திலிருந்து கொண்டு சென்று தப்பி விடலாம் என்று எண்ணி தப்பி ஓடிய பேருந்து ஓட்டுனர் ரமேஷ் நடத்துனர் சிந்து குமார் ஆகியோரின் செயல்கள் மக்களை முகம் சுளிக்க வைத்தது. விபத்து ஏற்படுத்தியதும் அல்லாமல் அதை மறைக்க அந்த இடத்திலிருந்து தப்பி செல்ல முயலும் இது போன்ற குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

error: Content is protected !!
Open chat