October 23, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

கடையம் வட்டார விவசாயிகளுக்கு அம்பை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் பயிற்சி

கடையம் வட்டார விவசாயிகளுக்கு அம்பை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் பயிற்சி கடையம் வட்டாரத்தில் நடப்பு கார் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிரில் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் நெல் பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறி விவசாயிகளுக்கு பெரும் சேதம் ஆகிவிட்டது.

வரும் பிசான பருவத்தில் மீண்டும் நெல் பயிரில் ஊட்டச்சத்து பற்றாக்குறைவு வராமல் தடுக்க கடையம் வேளாண்மை உதவி இயக்குனர் திருமதி.ஏஞ்சலின் பொன்ராணி அவர்கள் உத்தரவின் பெயரில் அட்மா திட்டத்தின் கீழ் 40 விவசாயிகள் அம்பை நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு அழைத்து சென்று பயிற்சி அளிக்கப்பட்டது.

வேளாண்மை உதவி அலுவலர் கமல்ராஜன் வரவேற்புறை ஆற்றினார். பேராசிரியர் ஆறுமுகச்சாமி விவசாயிகள் பிசான பருவத்தில் முதல் மேலூரம் போடும் போது யூரியா வுடன் ஜிப்சம் ஏக்கருக்கு 5 கிலோ கலந்து வயலில் இட வேண்டும், ஒரு ஏக்கருக்கு இட வேண்டிய பொட்டாஷ் உரத்தை 5,7,8 கிலோ என மூன்றாக பிரித்து இட வேண்டும்.ஜிங்சல்பேட்-10 கிலோ அல்லது நெல் நுண்ணூட்ட உரம்-5 கிலோஇடவேண்டும் என்று பிசான பருவத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி எடுத்து கூறினார்.

மேலும் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிரில் உரங்கள்மேலே கூறிய பரிந்துரை படி இடப்பட்டதால் ஊட்டச்சத்து பற்றாக்குறைவு காரணமாக மஞ்சள் வரவில்லை என்ற விளக்கம் வயல்களுக்கு விவசாயிகளை கூட்டி சென்று காண்பிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி அலுவலர்கள் ஜெகதீஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி, பேச்சியப்பன், தீபா கலந்து கொண்டனர்.இந்நிகழ்சிக்கான ஏற்பாடுகளை அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர் சுபா செய்திருந்தார்.

You may have missed

error: Content is protected !!
Open chat