November 30, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

பூசாரிகளுக்கு மாத ஊக்கத் தொகை முதல்வர் வழங்கினார்

ஒருகாலப் பூஜைத்திட்டத்தின்கீழ் உள்ள 12,959 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள்/ பட்டாச்சாரியார்கள் / பூசாரிகளுக்கு மாத ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (11.9.2021) சென்னை, திருவான்மியூர் அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில் ஒருகாலப் பூஜைத் திட்டத்தின்கீழ் உள்ள 12,959 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள்/ பட்டாச்சாரியார்கள் /பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் சந்தித்த பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அதில் இருந்து அவர்களையும், அவர்கள் குடும்பத்தினரையும் மீட்டெடுக்கும் பொருட்டு துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திருக்கோயில்களில் நிலையான மாத வருவாயின்றி பணியாற்றி வந்த அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருள்களுடன் ரூ.4,000/-, உதவித்தொகை வழங்கப்பட்டது, இதன்மூலம் சுமார் 11,065 திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் பயன்பெற்றுள்ளனர். மேலும், அர்ச்சகர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்களுக்கான குடியிருப்புகள் 6 இடங்களில் ரூபாய் 21 கோடியே 40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டித் தரப்படும் அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.  என திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மாத வருவாயின்றி பணியாற்றி வந்தது தெரியவந்தது. அதன்படி கடந்த 4.9.2021 அன்று இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையின்போது ஒருகாலப் பூஜை திட்டத்தின்கீழ் உள்ள 12,959 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூபாய் 1,000/- வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக சென்னை, திருவான்மியூர் அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில் இன்று மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, பேசியதாவது:

உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்!

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் அவர்கள் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து, இந்த நிகழ்ச்சியில் நானும் கலந்து கொள்ளும் ஒரு அரிய வாய்ப்பை எனக்கு வழங்கி, அதன் மூலமாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் இங்கே பேருரையாற்ற வரவில்லை, சுருக்க உரையாற்ற வந்திருக்கிறேன். இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு, மகாகவி பாரதியார் அவர்களுடைய நினைவு நாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செய்ய, அவரது சிலைக்கு வணக்கம் செலுத்த நான் சென்றாக வேண்டும். எனவே, சுருக்கமாக எனது உரையை முடிக்க விரும்புகிறேன்.

நம்முடைய அறநிலையத் துறை அமைச்சராக இருக்கக் கூடிய அருமை சகோதரர் சேகர்பாபு இந்த அறநிலையத்துறையினுடைய பொறுப்பை ஏற்றுக் கொண்டு அவர் எப்படி எல்லாம் பணியாற்றி கொண்டு இருக்கிறார் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். உள்ளபடியே அவரை சேகர்பாபு என்று அழைப்பதைவிட “செயல்பாபு” என்று தான் அழைக்க வேண்டும் என்று நான் கருதிக் கொண்டு இருக்கிறேன். அந்தப் பெயருக்கு முழுத் தகுதி படைத்தவராக அவர் விளங்கி கொண்டு இருக்கிறார். அதற்கு இந்த நிகழ்ச்சியே சான்றாக அமைந்து இருக்கிறது.

சட்டமன்றத் திட்டத்தை அறிவித்து ஒரு வாரம் தான் ஆகிற இன்னும் சட்டமன்றமே முடியவில்லை, 13ஆம் தேதி தான் முடிவடைகிறது. சட்டமன்றத்தில் அறிவித்து ஒரு வாரம் ஆவதற்கு முன்னாலேயே இந்தத் திட்டத்தை செயல்படுத்தியவர் சேகர்பாபு  தான்.

நாம் அடிக்கடி சொல்வோம், ‘எள் என்றால், எண்ணெய் ஆக நிற்பார்’ என்று. சேகர்பாபு அவர்களைப் பொறுத்தவரையில் எள் என்று சொல்வதற்கு முன்னாலேயே எண்ணெய் ஆக நிற்கக் கூடியவர் நமது அருமை நண்பர் சேகர்பாபு.

இங்கே அமைச்சர்கள் வேலு இருக்கின்றார், மா.சுப்பிரமணியன் இருக்கின்றார். தப்பாக நினைக்க மாட்டார்கள். நான் உரிமையோடு சொல்கிறேன். உண்மையில் சொல்ல வேண்டுமானால், இந்த, இந்து சமய அறநிலையத் துறை கொடுத்து வைத்த துறையாக சேகர்பாபு அவர்களால் மாற்றப்பட்டு இருக்கிறது. 24 மணி நேரமும் செயல்படக் கூடிய அமைச்சராக நம்முடைய அமைச்சர் சேகர்பாபு விளங்கி கொண்டு இருக்கிறார்கள். தொலைகாட்சியில் பார்க்கிறீர்கள். பத்திரிகைகளில் நீங்கள் பார்க்கிறீர்கள்.

நிலங்கள் மீட்கப்படுகின்றன. கோவில் சொத்துக்களும் மீட்கப்படுகிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் நிறைவேற்றப்பட்டு கோவில் இருக்கிறது.

தமிழில் வழிபாடு செய்யப்படக்கூடிய ஒரு அற்புதம் இந்த துறையின் மூலமாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

error: Content is protected !!
Open chat