January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பாரதியார் நினைவு இல்லத்தில் முதல்வர் மரியாதை

பாரதியார் நினைவு இல்லத்தில் நூற்றாண்டுத் தொடக்க நிகழ்ச்சி 

தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று (12.9.2021) சென்னை, திருவல்லிக்கேணி, பாரதியார் நினைவு இல்லத்தில் நடைபெற்ற மகாகவி பாரதியார் நினைவு நாள் நூற்றாண்டுத் தொடக்க நிகழ்ச்சியில், மகாகவி பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அங்குள்ள புகைப்படங்களை பார்வையிட்டார் முதல்வர்

இந்நிகழ்வின்போது,  உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன் இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப., வானவில் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் கே.ரவி, தலைவர் வ.வே.சு., டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன், முனைவர் உலக நாயகி பழனி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.

error: Content is protected !!
Open chat