May 26, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

‘நீட்’ தேர்வு குறித்த சட்டமுன்வடிவினை முதல்வர் முன்மொழிந்தார்

‘நீட்’ தேர்வு குறித்த சட்டமுன்வடிவினை முன்மொழிந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரை 

மாண்புமிகு முதலமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நீட் என்னும் தேர்வைக் கொண்டு வந்து மருத்துவக் கல்விக் கனவைச் சிதைத்து வரும் ஒன்றிய அரசுக்கு எதிராக கடந்த நான்காண்டு காலமாகத் தமிழ்நாட்டில் மிகக் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. விலைமதிக்க முடியாத மாணவ, மாணவியர் தங்களது இன்னுயிரை இந்தப் போராட்டத்துக்கு தாரைவார்த்து மறைந்து போயிருக்கிறார்கள். தொடக்கத்தில் இருந்தே இந்த நீட் தேர்வை திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்த்து வருகிறது. ஏனென்றால் மாணவர்களுக்குக் கல்வித் தடையை ஏற்படுத்தக்கூடிய நுழைவுத் தேர்வுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்த அரசுதான் திராவிட முன்னேற்றக் கழக அரசு.

இதன் தொடர்ச்சியாக நீட் தேர்வை இரத்து செய்ய, கழக அரசு அமைந்தவுடன் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தேர்தல் அறிக்கையிலே  குறிப்பிட்டிருக்கிறோம். அதை நிறைவேற்றும் வகையில் மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகிய இளநிலை மருத்துவக் கல்விச் சேர்க்கைகளை, இனிமேல் 12 ஆம் வகுப்புத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் நடத்துவதற்கு ஏதுவாக, வலிமையான

சட்டமுன்வடிவினை இப்பேரவையில் நான் முன்மொழிகிறேன்.

கழக பொறுப்பேற்றவுடன் நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்ட த்தை தொடங்கியிருக்கிறோம். ஒன்றிய அரசால் நடத்தப்படும் நீட் தேர்வால் சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பித்திட ஒய்வு பெற்ற நீதியரசர் டாக்டர் ஏ.கே. இராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தோம். அரசாணை எண் 283, மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை, நாள் 10-6-2021 அன்று இந்தக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவிலே பல்வேறு கல்வியாளர்கள் மற்றும் அதிகாரிகள் இடம்பெற்று இருந்தார்கள். இந்த உயர்மட்டக் குழுவின் ஆய்வு வரம்புகளும் வெளியிடப்பட்டன. பொது கருத்துக்களை இக்குழு கேட்டுப் பெற்றது. மக்கள் அனைவரிடம் இருந்தும் மின்னஞ்சல், கடிதங்கள் மற்றும் ஆணையத்தில் வைக்கப்பட்டிருந்த கருத்துக் கேட்புப் பெட்டியில் போடப்பட்ட மனுக்கள் என ஆணையத்துக்கு பல்லாயிரக்கணக்கானவர்கள் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்கள். இந்த வழிமுறைகளின் வாயிலாக 86 ஆயிரத்து 342 பேர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளை ஆராய்ந்து, தனது விரிவான பரிந்துரைகளை நீதியரசர் ஏ.கே. இராஜன் குழு அரசுக்கு அளித்தது. மருத்துவக் கல்வியைப் பொருளாதாரத்தில்        14-7-2021 அன்று அரசுக்கு அளித்தது. அந்தப் பரிந்துரைகளில் சமுதாயத்தில் பின்தங்கியோர் மருுததுவம் கல்வியை பெறும் கனவிற்கு  இடையூறாகவும், சமூக பொருளாதாரத்தில் வளர்ந்த பிரிவினருக்கு சாதகமாகவும் இருந்து,  எம்.பி.பி.எஸ் மற்றும் உயர் மருத்துவப் படிப்புகளிலுள்ள பலதரப்பட்ட சமூகப் பிரதிநிதித்துவத்தை நீட் தேர்வானது குறைத்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

குறிப்பாக, அரசுப் பள்ளியின் மாணவர்கள், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 இலட்சத்திற்கும் குறைவாகக் கொண்டுள்ளவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர் மற்றும் பட்டியலின பழங்குடியினர் போன்ற பிரிவுகளைச் சேர்ந்த வசதி குறைந்தவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், எம்.பி.பி.எஸ். மாணவர்களின் தகுதி அல்லது தரத்தினை நீட் தேர்வு உறுதிசெய்வதாகத் தெரியவில்லை எனவும், ஒப்பிடுகையில், குறைந்த செயல்திறன் கொண்ட (தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் மேனிலை மதிப்பெண்களில்) மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்க்கை பெறுவதற்கு மட்டுமே தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு சுட்டிக்காட்டுகின்றன. புகுத்தியுள்ளது எனவும் அறிக்கை முடிவுகள்

ஆகவே, 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிற்சார் கல்வி நிறுவனங்களில் சேர்க்கைச் சட்டத்தை (தமிழ்நாடு சட்டம் 3/2007) போன்றதொரு சட்டத்தை மாநில அரசு நிறைவேற்றி, அதற்காக குடியரசுத் தலைவருடைய ஒப்புதலைப் பெறலாம் என்றும் இந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த உயர்மட்டக் குழு அளித்த விரிவான பரிந்துரைகளைச் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள, தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் அரசு செயலாளர்களைக் கொண்ட குழு ஒன்று 15-7-2021 அன்று அமைக்கப்பட்டது. செயலாளர்கள் குழு, 2007-ல் தமிழ்நாடு அரசால் இயற்றப்பட்ட சட்டத்தைப் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் முன்மொழிந்தார்.

error: Content is protected !!
Open chat