October 17, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

தயாரிப்பாளர்கள் கூட்டுக்குழு – முதல்வருக்கு நன்றி

ஒருங்கிணைந்த தயாரிப்பாளர்கள் கூட்டுக்குழு

தமிழத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் நலன் கருதி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்த “ஒருங்கிணைந்த தயாரிப்பாளர்கள் கூட்டுக்குழு” கடந்த 17.09.2021 கலந்தாய்வு கூட்டம் நடத்தியது. அதில், பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. குறிப்பாக. தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் பாதிக்கபடாத வண்ணம், கோயம்புத்தூர் மாநகரில் ஞாயிற்றுக்கிழைமகளில் மூடி இருக்கும் திரையரங்குகள் திறக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் அவர்களிடத்தில் ஒருங்கிணைந்த தயாரிப்பாளர்கள் கூட்டுக்குழு சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

 

எங்களது கோரிக்கையை கனிவுடன் ஏற்று. தாயுள்ளத்தோடு பரிசீலனை செய்து தற்போது கோயம்புத்தூர் மாநகரில் உள்ள கட்டுபாடுகளை நீக்கி ஞாயிற்றுக்கிழமைகளில் திரையரங்குகளை திறந்துகொள்ளலாம் என்ற அரசாணை வெளியிட்டிருப்பது தமிழ்த் திரையுலகினருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசாணை வெளியிட்ட  தமிழக முதல்வர்க்கும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினரும், சேப்பாக்கம்-திருவல்லிகேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின்க்கும், அரசாணை வெளியிட உறுதுணையாக இருந்த தமிழக அரசு அதிகாரிகளுக்கும், தமிழ்த் திரையுலகினரின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

error: Content is protected !!
Open chat