October 17, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

விவசாய பெருமக்களின் பாரத் பந்த் அறவழி போராட்டத்திற்கு பால் முகவர்கள் சங்கம் ஆதரவு

“விவசாய பெருமக்களின் பாரத் பந்த் அறவழி போராட்டத்திற்கு பால் முகவர்கள் சங்கம் ஆதரவு“*

அந்நிய முதலீடு, ஆன்லைன் வர்த்தகம் சுதேசி வணிகத்தையும், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களையும் சீரழித்தது போல் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள கறுப்பு வேளாண் சட்டங்களால் நமது விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால் அந்த கறுப்பு சட்டங்களை எல்லாம் திரும்பப்பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் கடந்த 10மாதங்களுக்கு மேலாக போராடி வரும் விவசாய பெருமக்களின் நியாயமான கோரிக்கைகள் இன்னும் கண்டு கொள்ளப்படாமல் இருப்பது வேதனை.

தேசத்தின் முதுகெலும்பாக திகழும் விவசாயத்தை அதானி, அம்பானிகளுக்கு தாரை வார்த்து விட்டு, விவசாய பெருமக்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுக்க துடிக்கும் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசின் சர்வாதிகார போக்கை கண்டித்தும், அந்த கறுப்பு சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும் திங்கட்கிழமை (27.09.2021) தேசம் தழுவிய அளவில் நடைபெற இருக்கும் “பாரத் பந்த்” அறவழி போராட்டத்திற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தார்மீக அடிப்படையில் ஆதரவளிக்கிறது.

மேலும் திங்கட்கிழமை நடைபெற இருக்கும் “பாரத் பந்த்” அறவழி போராட்டத்தின் போது பொதுமக்களின் நலன் கருதி பால் விநியோகம் மற்றும் விற்பனையில் தடை ஏற்படாவண்ணம் தமிழகம் முழுவதும் விவசாய அமைப்புகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள் நடத்தும் அறவழியிலான ஆர்ப்பாட்டங்கள், உண்ணாநிலை போராட்டங்களில் எங்களது சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கறுப்பு சட்டை, கறுப்பு பட்டை அணிந்து கொண்டு கலந்து கொள்வதோடு, விவசாயத்தில் ஒரு அங்கமாக விளங்கும் பால்வளத்துறை சார்பில். எங்களது எதிர்ப்பை பதிவு செய்ய இருக்கிறார்கள்  என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கூறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!
Open chat