December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

இராமேஸ்வரம்-இராமநாதபுரம் கோயிலில் அமைச்சர் ஆய்வு

இராமேஸ்வரம்-இராமநாதபுரம் கோயிலில் ஆய்வு. அமைச்சர் பி.கே.சேகர்பாபு மேற்கொண்டார்!

முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி இராமநாதபும் மாவட்டம், இராமேஸ்வரம் அருள் மிகு இராமநாதசுவாமி திருக்கோவிலில் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார்.

இராமநாதபாம் மாவட்டம், இராமேஸ் வரம் அருள்மிகு இராம நாதசுவாமி திருக்கோவி லில் நேற்று (25.9.2021) இந்துசமயம் மற்றும் அற நிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நேரில் ஆய்வு மேற்க்கொண்டார்.

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ. குமரகுருபரன், சட்டமன்ற உறுப்பினர்கள் காதர் பாட்சா முத்துராமலிங்கம் (இராமநாதபுரம்), செ.முருகேசன் பரமக்குடி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கே.ஜே.பிரவீன்குமார்,      உடனிருந்தனர்.

தொடர்ந்து இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்ததாவது:

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோவிலில் உள்ள திருத்தேர்கள் முறையான பராமரிப்பு இல்லாமலும், பயன்பாடு இல்லாமலும் இருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு வரப்பெற்றதையடுத்து, திருக்கோவிலில் உடனடியாக ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டார்கள். ஆய்வு மேற்கொண்டதில் இத்திருக்கோவிலில் உள்ள 1 தங்கத்தேர், வெள்ளி தேர், 3 மரத்தேர் ஆகியவை முறையாக பராமரிக்க நிலையில் உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் தங்கத்தேர் ஒரே ஒருமுறை மட்டுமே வீதியுலாவிற்கு பயன்படுத்தியுள்ளனர். வெள்ளி தேரையும் ஓரிரு முறை தான் பயன் பாட்டிற்க்கு வந்துள்ளது. திருக்கோவிலில் உள்ள திருத்தேர்களை முறையே பராமரித்து முழு பயன் பாட்டிற்கு கொண்டு வருவதே இந்து சமய அறநிலையத்துறையின் நோக்கம். வல்லுனர்களைக் கொண்டு திருத்தேர்களை ஆய்வு செய்து உரிய முறையில் பராமரிப்பு செய்திடவும், தேவைப்படும் பட்சத்தில் புதிதாக தேர் அமைத்திடவும் நட வடிக்கை மேற்கொள்ளப்படும்

மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் திருக்கோவில்களில் உள்ள திருத்தேர், நந்தவனம். திருக்குளம் ஆகியவற்றை முறையாக பராமரிக்கவும், திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பொதுமக் களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் உத்தர விட்டுள்ளார்கள், அதன டிப்படையில் முதற்கட்ட மாக தமிழகத்திலுள்ள 47 முதல்நிலை கோயில்களில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வரைவு மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. திட்ட (வரைவு ஒப்புதல் பெற்று விரைவில் பணிகள் துவங்கப்படும், தொடர்ந்து 529 திருக்கோயில் களில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள திட்ட வரைவு மேற்கொள்ளப் படும் என இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் தெரிவித்தார்

இந்த ஆய்வின்போது, இந்து சமய அறநிலையத் துறை இணை அரசு ஆணையர்கள். பழனிக்குமார். முனைவர் தனபாலன், இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சேக் மன்சூர் உட்பட அலுவலர்கள் உடனிருந் தனர்.

error: Content is protected !!
Open chat