வத்தல் மலையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (30.9.2021) தருமபுரி மாவட்டம், வத்தல் மலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 2116 பயனாளிகளுக்கு 16 கோடியே 47 இலட்சத்து 35 ஆயிரத்து 433 ரூபாய் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் அடையாளமாக 10 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டி.என்.வி.எஸ். செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.கே. மணி, எஸ்.பி. வெங்கடேஷ்வரன், தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
More Stories
கல்லூரி கனவு நிகழ்ச்சி முதல்வர் தொடங்கி வைத்தார்
சென்னையில் அஞ்சலக குறைதீர்ப்புகூட்டம்
குழந்தை கடத்தலில் ஈடுபட்ட டிவி நிருபர் உள்பட 3 பேர் கைது