January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

1ஆம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது உறுதி!

நவம்பர் 1ஆம் தேதியன்று 1ஆம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது உறுதி!

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டம்

நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1 முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது உறுதி. மறு பரி சீலனை செய்யப்படாது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன் பில் மகேஷ் பொய்யா மொழி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

திருச்சியில் 75வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் மினி மாரத்தான் போட்டி யினை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய் யாமொழி கொடியசைத்து நேற்று துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மகாத்மா காந்தியடிகள் போன்ற உயர்ந்த தலைவர்களைப் போற்றும் வகையில் விழிப்புணர்வு போட்டிகளை தி.மு.க. அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் பொது மக்கள் அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நலத்திட்ட உதவிகளையும் தி.மு.க. செய்துவருகிறது என்றார்.

நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி கொண்டாடப் பட உள்ள நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து மறுபரிசீலனை செய்யப்படுமா? குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,

பள்ளிகளை திறப்பது குறித்து அனைத்து மாவட்டங்களில் உள்ள முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தி முதலமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பித்தோம். குழந்தைகளின் நலன் என்பதால் பள்ளிகள் திறப்பது குறித்து மருத்துவத் நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தினோம்.

அதற்கு பிறகு ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் உத்தரவிட்டார். எனவே நவம்பர் 1ஆம் தேதி ஒன் றாம் வகுப்பு முதல் எட் டாம் வகுப்பு வரை பள் ளிகள் திறப்பதில் எந்தவிதமாற்றமும் இல்லை என்றார்.

இந்த மாரத்தான் ஓட்டமானது ரயில்வே ஜங் சன் ரவுண்டானா, ரயில்வே மேம்பாலம். மன்னார்புரம் ரவுண் டானா, ஆட்சித்தலைவர் முகாம் அலுவலக சாலை வழியாக அண்ணா விளையாட்டு அரங்கத்தை சென்றடைந்தது. இதில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலை வர்சிவராசு, கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ். பாரதிதாசன் பல்கலை கழக துணை வேந்தர் முனைவர்.எம்.செல்வம், பல்கலைக் கழகப் பதிவாளர் முனைவர் கோபிநாத், நாட்டு நலப்பணித் திட்ட நிகழ்ச்சி அலுவலர் முனைவர் லட்சுமி பிரபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

error: Content is protected !!
Open chat