December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

சென்னையில் தான் என்னுடைய கடைசி கிரிக்கெட் ஆட்டம்..
ரசிகர்களிடம் ஆன்லைனில் கலந்துரையாடிய தோனி

ஐபிஎல்லில் தனது கடைசி கிரிக்கெட் போட்டியை சென்னையில் ஆட விருப்பப்படுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்..

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த ஆண்டு 2020ல் ஓய்வு பெற்றார்..பின் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகின்றார். 2021 ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அவர் பங்கேற்பாரா என்ற கேள்வி அப்போது எழுந்தது..2020ம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், சிஎஸ்கே அணிக்கான கடைசி ஆட்டம் இதுதானா? என வர்ணனையாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு கண்டிப்பாக இல்லை என தோனி பதிலளித்தார்..

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறினாலும் தயார் தோனி இல்லை என்றும் அடுத்த ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகமும் எழுந்தது. இந்த ஆட்டத்துடன் தோனி ஓய்வு பெறுவார் என்ற தகவலும் வெளியானது.
இந்நிலையில், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75 ஆண்டு தினத்தையொட்டி சென்னை ரசிகர்களிடம் மகேந்திர சிங் தோனி ஆன்லைன் மூலமாக கலந்துரையாடினார். அப்போது ஐபிஎல் அடுத்த தொடரில் விளையாடுவீர்களா ?

என ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த தோனி ஐபிஎல்லில் தனது கடைசி போட்டி சென்னையில் தான் இருக்கும் எனவும், சென்னையில் விளையாடுவதே தான் விருப்பப்படுவதாகவும் தெரிவித்தார். அடுத்த வருடம் சென்னையில் போட்டிகள் நடக்கும் எனவும், அப்போது ரசிகர்களை சந்தித்து அவர்கள் முன்னிலையில் விடைபெறுவேன் எனவும் தெரிவித்தார்.

error: Content is protected !!
Open chat