January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

உள்ளாட்சித் தேர்தல்: நாளை இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு!

உள்ளாட்சித் தேர்தல்: நாளை இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு!

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக் குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப் பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரு கட்டங்களாக நடை பெறும் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

இந்த தேர்தலில் 27 ஆயிரத்து 3 பதவி இடங்களுக்கு தேர்தல் நடத்த வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இதில் போட்டியிட 98 ஆயிரத்து 151 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு பரிசீலனைக்கு பின்பு ஆயிரத்து 166 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 14 ஆயிரத்து 571 பேர் தங்களது வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றனர்.

இதைத்தொடர்ந்து 2 ஆயிரத்து 981 பதவி களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந் தெடுக்கப்பட்டனர்.

முதல்கட்ட தேர்தல்

இதன் காரணமாக 9 மாவட்டங்களில் 23 ஆயிரத்து 998 பதவி இடங்களுக்கு தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த போட்டி யில் 79 ஆயிரத்து 433 பேர் களத்தில் இருந்தனர்.

இந்த 9 மாவட்டங்களில் 39 ஊராட்சி ஒன்றி யத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 78 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவி இடங்களுக்கும், 755 ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன் சிலர் பதவி இடங்களுக் கும், ஆயிரத்து 577 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கும், 12 ஆயிரத்து 252 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும் என மொத்தம் 14 ஆயிரத்து 662 இடங்களுக்கு முதல்கட்ட தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில் 74.37 சதவிகித வாக்குப் பதிவு பதிவானது. மீதமுள்ள இடங்களுக்கான 2-ம் கட்ட தேர்தல் நாளை (சனிக்கி ழமை) நடைபெறும். இதைத்தொடர்ந்து 12-ந் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

 

error: Content is protected !!
Open chat