January 17, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

5 வது தடுப்பூசி முகாம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

5 வது தடுப்பூசி முகாம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

தமிழகத்தில் நேற்று மட்டும் 22.52 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது! 5 வது தடுப்பூசி முகாம் குறித்து திண்டுக்கல் உள்பட 3 மாவட்டங்களில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு!

தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 32,017 மையங்களில் மெகா கோவிட் தடுப்பூசி பணிகள் நடைபெற்றது. இம்மையங்களில் 18வயதிற்கு மேற்பட்ட அனைத்து பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணையும் அளிக்க திட்டமிடப்பட்டது. இது வரை நடைபெற்ற நான்கு மெகா கோவிட் தடுப்பூசி முகாம்கள் பற்றிய விவரம் பின்வருமாறு:

முதலாவது சுற்று 12.09.2021-28.91 லட்சத்தில்

இரண்டாவது சுற்று 19.09 2021 – 16.43(லட்சத்தில்)

மூன்றாவது சுற்று 26.09.2021 – 25.04 (லட்சத் தில்)

நான்காவது சுற்று 03.10.2021-17.04 (லட்சத் தில்)

நேற்று (10.10.2021) நடை பெற்ற ஐந்தாவது மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 22,52,641 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப் பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 11,50,351 பயனாளி களுக்கும் இரண்டாவது தவணையாக 11,02,290 பயனாளிகளுக்கும் கோவிட் தடுப்பூசி வழங் கப்பட்டுள்ளது. மேலும், தற்போது அரசு கோவிட் தடுப்பூசி மையங்களில் மட்டுமே 5 கோடிக்கு மேற் பட்ட பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை திண்டுக்கல், கரூர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஆய்வு செய்தார்.

இராமநாதபுரம் மாவட் டத்திலுள்ள மண்டபம் இலங்கைத்தமிழர் அகதிகள் முகாம் பகுதியில் அமைக்கப்பட்ட மெகா கோவிட் தடுப்பூசி முகாம்களை நேற்று ஆய்வு செய்தார்.

மேலும், மாநிலத்தில் நேற்று (10.10.2021) நடைபெற்ற ஐந்தாவது மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமினை முன்னிட்டு இன்று (11.10.2021) கோவிட் தடுப்பூசி பணிகள் நடைபெறாது என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!
Open chat