January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

மின் கோபுர எதிர்ப்பு போராட்டத்தில் மேலும் ஒரு விவசாயி பலி.

மின் கோபுர எதிர்ப்பு போராட்டத்தில் மேலும் ஒரு விவசாயி பலி.

உயரழுத்த மின் கோபுர எதிர்ப்பு போராட்டத்தில் மேலும் ஒரு விவசாயி பலி. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கலிங்க மலை கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் மணி (வயது 51) தனது நிலத்தில் போடப்பட்டிருந்த உயர் மின் கோபுரத்தில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கு தமிழ்நாடு அரசின் அலட்சியமே காரணம். தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம்தான் உயர்மின் கோபுர அமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. உரிய இழப்பீடு கொடுக்காமல் வேலை செய்த காரணத்தால்தான் மணி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த பிரச்சனை குறித்து ஜுலை 25ந் தேதி தமிழக மின்துறை அமைச்சரிடம் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பெ.சண்முகம், பி.டில்லிபாபு ஆகியோர் நேரில் சந்தித்து வலியுறுத்தினர். ஆகஸ்ட் 30ந் தேதி முதலமைச்சரிடம் இது தொடர்பாக மனு அளிக்கப்பட்டது.

உடனடியாக நடவடிக்கை எடுக்காத தமிழ்நாடு அரசுதான் பொறுப்பு. நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. உயரழுத்த மின் கோபுர திட்டத்தில் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட விவசாயி குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டு இன்று செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் திண்டிவனம் சப்-கலெக்டர், வட்டாட்சியர், திட்ட அமலாக்க அதிகாரிகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.டி.முருகன் உட்பட நிர்வாகிகள்கிராம மக்கள் கலந்து கொண்டனர். மணியின்‌ குடும்பத்திற்கு உடனடியாக 15 லட்ச‌ ரூபாய் நஷ்ட ஈடு வழங்குவதென்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும், மற்ற விவசாயிகளுக்கான இழப்பீடு முழுமையாக வழங்கும் வரை உயர் மின்கோபுர வேலைகள் செய்வதில்லை என்றும் ஏற்றுக் கொள்ளபட்டது. உடலை பெற்று அடக்கம் செய்ய ஒப்புக் கொள்ளப்பட்டது. தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் உயர் மின்கோபுர பிரச்சினையில் தீர்வை எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் – பெ.சண்முகம், மாநில பொது செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வலியுறுத்தியுள்ளார்

error: Content is protected !!
Open chat