January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நெல்சேமிப்பு, கொள்முதல் நிலையங்களில் அமைச்சர் அர.சக்கரபாணி ஆய்வு

நெல்சேமிப்பு மற்றும் கொள்முதல் நிலையங்களில் அமைச்சர் அர.சக்கரபாணி ஆய்வு! பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், அரிசி ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆய்வுகளை மேற்கொண்டார். சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன், முன்னாள் அமைச்சர் உ. மதிவாணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் இந்த ஆய்வுகளில் உடனிருந்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்களின் படி திருவாரூர் மாவட்ட நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் ஆய்வுகளை மேற்கொண்ட உணவு மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கூறியதாவது:

முதல்வர் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படையில் தமிழக அரசு விவசாயிகளிடமிருந்து உற்பத்தி நெல்களை உரிய நேரத்தில் கொள்முதல் செய்து தனியார் ஆலைகளுக்கும், தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக இயங்கும் 21 ஆலைகளுக்கும் அனுப்ப  உத்தரவிடப்பட்டுள்ளது.

திருவாரூர்மாவட்டத்தில் நுகர்பொருள் வாணி பக்கழகத்தின் மூலமாக 2 ஆலைகளுக்கும் 24 தனியார் ஆலைகளும் செயல்பட்டு வருகிறது. நெல் கொள்முதல் நிலையங்களில் செயல்பாடுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முதல்மைச்சர் அவர்களின் ஆலோசனைகளின்படி நெல் கொள்முதலை தாமதமின்றி உடனுக்குடன் கொள் முதல் செய்திட நடவடிக்கைகள் செல்படுத்தப்பட்டு வருகின்றன,

12 ஆண்டுகளுக்கு பிறகு சன்னரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ஏற்கனவே ரூபாய் 1958 வழங்கப்பட்டிருந்தது. அதனை ஊக்கத்தொகை உட்பட 2060 ரூபாயாகவும் இதுபோன்றே புது ரக நெல்லுக்கு 1918 ரூபாயாக இருந்ததை 2015 ரூபாயாகவும் உயர்த்தி விவசாயிகளுக்கு வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் திருவாரூர் மாவட்டத்தில் 265 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களில் குறைந்த பட்சம் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 1000 மூட் யடைகள் வரை கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 2020-2021 பருவத்தில் 856406 மெட் ரிக் டன் னும் 2021-2022 பருவத் தில் இதுவரை 19500 மெட்ரிக்டன் நெல் அளவும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளின் வசதிக்கேற்ப எங்கெல்லாம் நேரடி நெல்கொள் முதல் நிலையங்கள் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் உடனடி நயாக திறக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் தனியார் பங்களிப்புடன் நவீன அரிசி ஆலைகள் உருவாக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது தமிழக அரசு நெல் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கப்பட்ட தோடு உரிய நேரத்தில் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு பணம் உடனடியாக வழங்கப்படுவதால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நெல் உற்பத்தி கூடுதலாகும் என்றும் அமைச்சர் அரசக்கரபாணி கூறினார்.

முன்னதாக திருவாரூர் காட்டூரில் தலைவர் கலைஞர் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்திற்கு சென்று வணங்கிய அமைச்சர் அர.சக்கர பாணி கொரடாச்சேரி ஒன்றியம் கமுகக்குடி, வண்டாம்பாளையம், கச்சனம், பாமனி, திருத்துறைப்பூண்டி உள் யளிட்ட பகுதிகளிலும், திருவாரூர் எம்.ஆர்.எம். நவீன அரிசி ஆலை உள்ளிட்ட அரிசி ஆலைகளிலும் ஆய்வுகளை மேற்கண்டபோது சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே. கலைவாணன், முன்னாள் அமைச்சர் உமதிவாணன், முன்னாள் சட்ட யமன்ற உறுப்பினர் ஆடலரசன், மாவட்டராட்சி துணைப் பெருந்தலைவர் சேகர் என்கிற கலியபெருமாள் ஒன்றிய பெருந்தலைவர்கள் புலிவலம் ஏ.தேவா, ஆர். பாலச்சந்திரன், மாவட் ஆட்சித் தலைவர் காயத்ரி கிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் பங் கேற்றனர்.

error: Content is protected !!
Open chat