November 27, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

என்று தீரும் காஷ்மீரின் சோகம்? – பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்

என்று தீரும் காஷ்மீரின் சோகம்? – பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்

பாஜக மகளிரணி கூட்டத்தில் ஒலித்த ‘சலாம் அலைக்கும்’

அக்டோபர் 13-ம் தேதி காலை லே (Leh) நகரிலிருந்து புறப்பட்டு ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் தலைநகரான ஸ்ரீநகர் வந்து சேர்ந்தோம். வரும் வழியெங்கும் பனி மூடிய சிகரங்களை தாண்டி தாண்டிதான் விமானம் பறக்கிறது. சிகரங்களை தொட்டுச் சொல்வது போன்றே விமானங்கள் பறக்கின்றன.

நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் பாஜக தொண்டர்கள் ஒவ்வொருவரும், ‘காஷ்மீர்’ என்ற வார்த்தையை பல்லாயிரம் முறை உச்சரித்திருப்பார்கள். நானும் அப்படித்தான். கல்லூரியில் படிக்கும்போது ஏபிவிபியில் இணைந்தது முதல் ‘காஷ்மீர்’ என்ற வார்த்தையை உச்சரிக்காத நாள் இருக்காது என்றே நினைக்கிறேன். ‘காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை’ என்றுதான் நாட்டையே அழைக்கிறோம். காஷ்மீரில் இருந்துதான் நம்நாடு ஆரம்பிக்கிறது என்ற உணர்வு எங்களோடு கலந்துவிட்ட ஒன்று.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாஜகவுக்கு கட்சி ரீதியாக 10 மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களின் மகளிரணி நிர்வாகிகளின் கூட்டத்தை அக்டோபர் 12-ம் தேதி நடத்துவது என்று ஏற்கனவே திட்டமிட்டு நானும் வருவதாக உறுதி அளித்திருந்தேன். ஆனால், கடந்த ஒருவாரத்தில் அங்கு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவங்களில் பலர் கொல்லப்பட்ட சம்பவம் சூழலையே மாற்றியிருந்தது. இதனால் கூட்டத்தை நடத்த முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.

ஆனாலும், காஷ்மீர் பள்ளத்தாக்கு மகளிரணி நிர்வாகிகள் துணிச்சலுடன் கூட்டத்தை நடத்தினார்கள். நானும் கலந்து கொண்டேன். விமான நிலையத்தில் இருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் எனக்கு பாதுகாப்பு அளித்தனர். குண்டு துளைக்காத காரில் தான் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம். நம் நாட்டின் ஒரு பகுதியில் இப்படி பாதுகாப்புடன் பயணிக்க வேண்டியிருக்கிறதே என்று எனக்கு வேதனையாக இருந்தது.

நவராத்திரி விடுமுறை நாள்கள் என்பதால் கணவர், இரு மகன்களுடன் வந்திருந்தேன். எனது கணவர் திரு. சீனிவாசனுக்கு அன்று (அக்டோபர் 13) பிறந்த நாள். மகளிரணி நிர்வாகிகள் கூட்டத்திற்கு செல்ல வேண்டியிருந்ததால் அவர்களை தங்கும் விடுதியிலேயே விட்டுவிட்டு சென்றேன். ஸ்ரீநகரில் உள்ள பாஜக அலுவலகத்திலேயே கூட்டம் நடைபெற்றது. சோகமயமான சூழலிலும் மகளிரணி தேசியத் தலைவர் முதல் முறையாக வருவதால் பாரம்பரிய இசை முழங்க என்னை வரவேற்றனர். இந்த வரவேற்பு எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை. ஆனாலும், உணர்ச்சிவயப்பட்டேன்.

காஷ்மீர் பள்ளத்தாக்கைப் பொறுத்தவரை பாஜக மகளிரணியில் இருப்பவர்களில் 99சதவீதத்தினர் முஸ்லிம்கள். அவர்கள் சத்தமின்றி பாஜகவுக்கு பெரும் ஆதரவை அளித்து வருவதை தெரிந்து கொண்டேன். காஷ்மீர் பெண்களுக்கு சொத்துரிமை, முத்தலாக் தடைச் சட்டம் ஆகியவை காஷ்மீர் பெண்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. காஷ்மீரில் உள்ள பெண்கள் வேறு மாநிலத்தவரை திருமணம் செய்தால் சொத்தில் உரிமை இல்லை என்பது எவ்வளவு பெரிய கொடுமை? பிரதமர் நரேந்திர மோடிதான் அவர்களுக்கு இந்த உரிமையைப் பெற்றுத் தந்திருக்கிறார் என்று அவர்கள் பெருமையுடன் கூறுகின்றனர்.

மகளிரணி நிர்வாகிகள் கூட்டத்தில் எனது ஆங்கில உரையை முஸ்லிம் பெண்மணி ஒருவர்தான் காஷ்மீரி மொழியில் மொழிபெயர்த்தார். 99 சதவீத நிர்வாகிகள் முஸ்லிம்கள் என்பதால், ‘சலாம் அலைக்கும்’ என்று கூறிதான் பேசத் தொடங்குகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகளும் கூட்டத்திற்கு வந்திருந்தனர்.

காஷ்மீரி பண்டிட்களின் சோகம் தீர்ந்தபாடில்லை. ஒவ்வொருவரின் கதையும் மனதை பிழியும் சோகம். அவர்கள் வசித்த வீடுகள் இல்லை. வழிபட்ட கோயில்கள் இல்லை. அகதிகளாக எங்கோ வாழ வேண்டிய அவலம். 600 கோயில்கள் இருந்த ஸ்ரீநகரில் இப்போது 20 கோயில்கள் மட்டுமே இருக்கிறதாம்.

பாரமுல்லா மாவட்டத்தில் மக்கள் பிரதிநிதி கே.டி.நேரு என்பவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். அவரது மனைவி பாஜகவில் இருக்கிறார். அவர் கூட்டத்திற்கு வந்திருந்தார். ஸ்ரீநகரில் மருந்தகம் நடத்தி வந்த காஷ்மீரி பண்டிட் ஒருவரையும் சில நாள்களுக்கு முன்பு சுட்டுக் கொன்றுள்ளனர். அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். அவரது மருமகள் மருத்துவர். இவ்வளவு தூரத்தில் இருந்து எங்களைச் சந்திக்க வந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது என்றபோது மனம் நெகிழ்ந்தேன். எவ்வளவு தொலைவில் இருந்தாலும் ‘நீயும், நானும் சகோதரி தானே!’ என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

ஸ்ரீநகரில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. சுபிந்தர் கவுர் இல்லத்திற்குச் சென்று அவரத குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். அவர்களுக்கு இரு குழந்தைகள். ஒரு முஸ்லிம் பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிறார். குழந்தைகளுக்காக விட்டுவிடுங்கள் என்று கதறியும் இரக்கமின்றி பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். அவர்கள் கதறி அழுததைப் பார்த்து என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. தாங்க முடியாத சோகம்.

எதற்காக இத்தனை உயிப் பலிகள்? பயங்கரவாதிகளுக்கு என்னதான் வேண்டும்? காஷ்மீரின் சோகம் எப்போது முடிவுக்கு வரும்? என்று அடுக்கடுக்காக கேள்விகள் எழ, மனம் முழுக்க யோசனைகள் அலையடித்துக் கொண்டிருந்தன.

ஸ்ரீநகர் வந்து விட்டு தால் ஏரியை (Dal Lake) பார்க்காமல் சென்று விடாதீர்கள் என்று மகளிரணி நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதால் குடும்பத்துடன் அங்கு வந்தோம். நாம் ‘தால்’ ஏரி என்கிறோம். அவர்கள் ‘தல்’ ஏரி என்கின்றனர். எனது கணவரின் பிறந்த நாள் என்பதை தெரிந்து கொண்ட மகளிரணி நிர்வாகிகள், கேக் வாங்கி வந்து நாங்கள் எதிர்பார்க்காத வகையில் வெட்டச் செய்தனர். தால் ஏரிக் கரையில் கணவரை பிறந்த நாளை கொண்டாடினோம். என் கணவருக்கு இது மறக்க முடியாத பிறந்த நாளாக இருந்திருக்கும். என பாரதிய ஜனதா கட்சி வானதி சீனிவாசன் அறிக்கையில் கூறியுள்ளார்.

error: Content is protected !!
Open chat