November 30, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

ம.தி.மு.க வெற்றி கொண்டாட்டம் அணி திரண்டு வாரீர்

ம.தி.மு.க வெற்றி கொண்டாட்டம் அணி திரண்டு வாரீர்!

நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பு அற்ற முற்போக்குக் கூட்டணியில், மறுமலர்ச்சி தி.மு.க போட்டியிட்ட இடங்களில் எல்லாம் வெற்றி வாகை சூடியுள்ளது.

வெற்றிக்கான வியூகங்களை வகுத்து, வெற்றிக் கனியைப் பெற்றுத் தந்த தலைவர் வைகோ , 17.10.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி அளவில், மதுரையில் இருந்து வான் ஊர்தியில் சென்னைக்கு வருகின்றார்கள்.

பாலைவனத்தில் ஒரு சோலையாய், சதுப்பு நிலத்தின் ஊன்றுகோலாய் அமைந்திட்ட வெற்றியைக் கொண்டாட, திராவிட இயக்கப் போர்வாள் தமிழ் இனக் காவலர் தலைவர் வைகோ எம்பி  வரவேற்க, கைகளில் கழகக் கொடி ஏந்தி சென்னை விமான நிலையத்திற்கு அணி திரண்டு வாருங்கள் என, கண்ணின் மணிகளை அன்புடன் அழைக்கின்றேன். மறுமலர்ச்சி தி.மு.க துணைப் பொதுச் செயலாளர், மல்லை சி.ஏ.சத்யா அழைக்கிறார்.

error: Content is protected !!
Open chat