October 17, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

நீட் தேர்வு ரத்து செய்ய தெலுங்கான முதலமைச்சருக்கு கோரிக்கை கடிதம்

நீட் தேர்வு ரத்து செய்ய தெலுங்கான முதலமைச்சருக்கு கோரிக்கை கடிதம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி எழுதிய கடிதம் & நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு அளித்த பரிந்துரைகளை, தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் மகனும் – தொழில் துறை அமைச்சருமான கே.டி.ராமாராவிடம், கழக செய்தித்தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் MP அவர்கள் வழங்கினார். உடன்: Dr. கலாநிதி வீராசாமி MP

முழு விவரம்:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவின்படி, “நீட்” தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது எனவும் – அதனை ரத்து செய்திட, ஒன்றிய அரசை வலியுறுத்திட வேண்டுமெனவும் 12 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எழுதிய கடிதத்தின் தொடர்ச்சியாக,

கழக செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி., அவர்கள் கடந்த 6.10.2021 அன்று மாண்புமிகு கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களையும் – 11.10.2021 அன்று மாண்புமிகு ஆந்திர மாநில முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி அவர்களையும், நேரில் சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கடிதத்தை அளித்ததைத் தொடர்ந்து,

இன்று (13.10.2021), காலை, தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் அவர்களின் மகனும் – மாநில தொழில் துறை அமைச்சருமான கே.டி.ராமாராவ் அவர்களை நேரில் சந்தித்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கடிதத்தையும் – “நீட்” தேர்வு குறித்து தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு அளித்த பரிந்துரைகளையும் இணைத்து வழங்கினார்.

அதுபோது, கழக மருத்துவ அணி இணைச் செயலாளரும் – வடசென்னை தொகுதி கழக நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் கலாநிதி வீராசாமி உடனிருந்தார்.

error: Content is protected !!
Open chat