January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பாஜக கல்யாணராமன் கைது 

பாஜக கல்யாணராமன் கைது 

சமூக வலைதளத்தில் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக கருத்துக்களை தொடர்சியாக பரப்பி வந்த நபர் கைது

சென்னை, தொண்டையார்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் சென்னை மாநகர காவல் துறையில் அளித்த பகாரில், சென்னையைச் சேர்ந்த கல்யாணராமன் என்பவர் தனது பிஜெபி கல்யாண் என்ற டிவிட்டர் பக்கத்தில் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களிடையே வெறுப்புணர்வை வளர்க்கும் வகையிலும், மோதல் மற்றும் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கோடு தொடர்ந்து பதிவிடுவதாக கூறி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொண்டார். அதன்பேரில் மததிய குற்றபிரிவு, சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

புலன் விசாரணையில் கல்யாணராமன கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக 18 டிவீட்களை பதிவிட்டது தெரியவந்ததை தொடர்ந்து, வழக்கின் விசாரணை அதிகாரி தலைமையிலான தனிப்படையினர் கல்யாணராமன, வ/55, த/பெ.ரங்கசாமி, சென்னை என்பவரை நேற்று (16.10.2021) இரவு கைது செயதனர்.

விசாரணைக்குப் பின்னர் எதிரி கல்யாணராமன் நீதிமன்றத்தில் ஆஜரப்படுத்தப்பட உள்ளார்.

error: Content is protected !!
Open chat